இயக்குநருடன் நாடு நாடாக சுற்றும் சமந்தா.. பயங்கரமா பாதுகாக்குறாரே..இப்போ எங்கே போயிருக்காங்க பாருங்க

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில காரணங்களால் அவரை பிரிந்தார். பிரிவுக்கு பிறகு தொடர்ந்து நடிக்க ஆவலோடு இருந்த அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் சிறிது காலம் விலகியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க தி பேமிலி மேன், சிட்டாடல் ஹினி பன்னி வெப் சீரிஸ்களின் இயக்குநர்களில் ஒருவரான ராஜை சமந்தா காதலிப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார் சமந்தா. காதல் கதையான அந்தப் படத்தில் இரண்டு பேரும் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் பிரமாண்டமாக இரண்டு மத முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.

நடிப்பில் பிஸி: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டிவந்தார் சாம். அந்தவகையில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸிலும் சில படங்களிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க தாங்கள் பிரிவதாக அவர்கள் இரண்டு பேரும் திடீரென அறிவித்தார்கள். சமந்தா நடித்துக்கொண்டிருப்பதுதான் இந்தப் பிரிவுக்கு காரணம் என்று பலரும் தங்களது யூகங்களை காரணங்களாக சொன்னார்கள். ஒருதரப்பினரோ மையோசிடிஸ் நோய்தான் இந்த பிரிவை ஏற்படுத்தியதாகவும் சொன்னார்கள்.

Samantha shares photos from her trip to America with director Raj
Photo Credit:

பிரேக் எடுத்த சமந்தா: டைவர்ஸுக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்த சமந்தா; நோயிலிருந்து மீள்வதற்காக சிகிச்சைக்கு சென்றார். அதனால் சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் நிலை உருவானது. சிகிச்சை எடுத்து நோயிலிருந்து ஒருவழியாக மீண்ட அவர்; சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இரு படங்களுமே படுதோல்வியை சந்தித்து அவரது கரியரில் கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

சிட்டாடல்: இதனையடுத்து ஃபேமிலி மேன் இயக்குநார் ராஜ் மற்றும் டிகே ஆகியோரின் இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். இந்த சீரிஸ் அவருக்கு ஓரளவுக்கு கம்பேக்காக அமைந்தது. இப்போது இன்னொரு வெப் சீரிஸில் கமிட்டாகியிருக்கும் அவர்; தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மீண்டும் நடிக்கும் முடிவில் இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் காதல்?: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமந்தாவோ சிங்கிளாகவே தன்னை காட்டிக்கொள்கிறார். இருப்பினும் அவர் இயக்குநர் ராஜை காதலித்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரை இணைத்து கிசுகிசுக்கள் பரவினாலும் வெளிநாடுகளுக்கு அவர்கள் ஒன்றாக செல்வதை வழக்கமாக்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஜோடி: ஏற்கனவே அவர்கள் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தனர். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இப்போது ராஜுவும், சமந்தாவும் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார்கள். அந்த ஃபோட்டோக்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ஒன்றில், சமந்தாவின் தோளை அரவணைத்தபடி ராஜ் பாதுகாப்பாக அழைத்துவருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ சமந்தாவை இவ்வளவு பாதுகாப்பாக அழைத்துவருகிறார். தொடர்ந்து வெளிநாடு செல்கிறார்கள். அப்போது இது லவ்தானே ஜெஸ்ஸி என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X