நான் அப்படித் தான் கவர்ச்சியா டிரஸ் போடுவேன்: விமர்சித்தவர்களுக்கு நடுவிரலை காட்டிய சமந்தா
Recommended Video

சென்னை: தான் கவர்ச்சியாக உடை அணிவது குறித்து அசிங்கமாக பேசியவர்களுக்கு நடுவிரலை காட்டியுள்ளார் சமந்தா.
சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது விமர்சனத்திற்குள்ளானது. திருமணத்திற்கு பிறகும் அவர் கவர்ச்சியாக நடிப்பது மற்றும் நிஜத்திலும் கவர்ச்சி காட்டுவதை பார்த்து பலரும் விமர்சிக்கிறார்கள்.
அவர் பிகினி புகைப்படம் வெளியிட்டதற்கு நீங்கள் எல்லாம் திருமணமான பெண்ணா என்று கேட்டு பலரும் அவரை கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

சமந்தா
தன் உடைக்காக தன்னை யார் கடுமையாக விமர்சித்தாலும் அதை எல்லாம் சமந்தா கண்டு கொள்வது இல்லை. என் உடல், என் உடை, என் விருப்பம் என்று அவருக்கு பிடித்த வகையில் உடை அணிந்து வருகிறார். இருப்பினும் அவரை திட்டுபவர்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

வெளிநாடு
சமந்தா தனது கணவருடன் வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திருமணமான பெண் அணியும் உடையா இது, நீங்கள் நாகர்ஜுனா குடும்பத்திற்கு லாயக்கு இல்லை, டிரஸ்ஸிங் சென்சே இல்லை என்று வறுத்தெடுத்துள்ளனர்.

நாகசைதன்யா
தனது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடையை பார்த்துவிட்டு நீங்கள் நாகசைதன்யாவின் மனைவி மாதிரி தெரியவில்லை, வேறு மாதிரி இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
பதிலடி
தன் உடை பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை பார்த்த சமந்தா நடுவிரலை காட்டியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு பதில் அளித்துள்ளார். படத்தில் அவர் கவர்ச்சியாக வருவதை பார்த்து ரசிப்பவர்கள் நிஜத்தில் அவர் கவர்ச்சியாக உடை அணிந்தால் விளாசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











