»   »  சித்தார்த் ரொம்ப நல்லவரு… வல்லவரு… சொல்வது சமந்தா

சித்தார்த் ரொம்ப நல்லவரு… வல்லவரு… சொல்வது சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னுடைய சொந்த விசயத்தை மீடியாக்கள் பேசவேண்டாம் சித்தார்த் ரொம்ப நல்லவர் என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் நீண்ட காலமாகவே மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இருவருமே காதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக வெளியான செய்தி ஒன்று, சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

காதல் முறிவு

காதல் முறிவு

சித்தார்த் - சமந்தா தங்களது 2 வருட காதலை திடீரென்று முறித்துக்கொண்டனர். சித்தார்த்துடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் இந்த முறிவுக்கு காரணம் எனவும் பேசப்பட்டது.

பிரிந்தது ஏன்?

பிரிந்தது ஏன்?

இருவரும் பிரிந்தது ஏன்? என்று சமந்தாவிடம் கேட்டபோது அவர் கோபம் அடைந்தார். ‘நான் பெரும்பாதிப்புக்கு ஆளானதுபோல் இதையே எல்லோரும் கேட்கிறார்கள்.

என் சொந்த விசயம்

என் சொந்த விசயம்

நான் எதனாலும் பாதிக்கப்படவில்லை. சித்தார்த் நல்லவர். மீடியாக்கள் இதுபோல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய சொந்த விஷயம். அதனால் போதும் நிறுத்துங்கள்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார் சமந்தா.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

இது தொடர்பாக சித்தார்த் மவுனம் காத்து வருகிறார். இதற்கிடையில் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த்-சமந்தா நடிப்பதாக இருந்தது.

பேச்சுவார்த்தை இல்லை

பேச்சுவார்த்தை இல்லை

காதல் முறிவையடுத்து இருவரும் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தார்த்-சமந்தா இருவருமே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே ஒருவருடன் ஒருவர் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

நடிப்பது உறுதி

நடிப்பது உறுதி

அதே சமயம் பெங்களூர் டேஸ் படத்தில் இருவரும் நடிப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருவரும் சேர்ந்து நடிப்பார்கள். திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் பட தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

நடிப்பில் மட்டும்

நடிப்பில் மட்டும்

சமந்தா இனி முழு வீச்சில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். எது எப்படியோ காதலித்தாலும் செய்திதான்... காதல்புட்டுக்கிட்டாலும் நமக்கு செய்திதான் போங்க!...

English summary
As we had earlier reported, Tollywood's cute pair Siddharth and Samantha are no longer a couple. They ended their relationship some time ago, according to sources. Reacting to a news report on her alleged break up with Siddharth that appeared in an English daily recently, actress Samantha tweeted, "The article in the DC makes me look like the victim. I am not. Siddharth is a great guy. Media stop taking sides. This is personal. STOP. There will be no further clarifications or comments about my relationship. Thankyou.
Please Wait while comments are loading...