ஸ்கின் அலர்ஜி… லண்டனுக்கு பறந்த சமந்தா!
நடிகை சமந்தாவிற்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமந்தாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சருமநோய் பிரச்னை இருந்தது. அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் சமந்தா நடித்ததால் இந்த அலர்ஜி ஏற்பட்டது.
சருமநோயால் அவஸ்தைப்பட்ட சமந்தா ஆறு மாதங்கள் வரை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் தான் மணிரத்தினத்தின் 'கடல்', ஷங்கரின் 'ஐ' பட வாய்ப்புகளை இழந்தார்.

விஜய், சூர்யா படங்களில்
சரும நோய் சிகிச்சைக்குப் பிறகு சமந்தா நடித்த பெரும்பாலான தெலுங்குப் படங்கள் ஹிட்டாகின. இந்த நிலையில் விஜய், சூர்யா படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

மீண்டும் ஸ்கின் அலர்ஜி
மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டானபோது ஏற்பட்ட தோல் அலர்ஜி நோய் இப்போது மீண்டும் எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளதாம்.

அலர்ஜியால் சிகிச்சை
அஞ்சான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இரண்டே நாட்களில் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறி சிகிச்சை பெற்றார் சமந்தா.

லைட்தான் காரணமா?
படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன லைட்கள்தான் மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டதற்கு காரணம் என்று மருத்துவர்கள் சொன்னதையடுத்து, சமந்தா சம்பந்தப்பட்ட சீன்களுக்கு பவர்புல் லைட்களை யூஸ் பண்ணுவதை குறைத்துக்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் சிகிச்சை
இந்தநிலையில், தோல் சிகிச்சையை இப்போது இன்னும் தீவிரப்படுத்தியுள்ள சமந்தா, ஒரு ஹாலிவுட் நடிகை கொடுத்த ஆலோசனைப்படி தற்போது லண்டனில் உள்ள ஒரு மருத்துவரிடம் அணுகி சிகிச்சை பெற்று வருகிறார்.

லட்சக்கணக்கில் செலவு
சரும சிகிச்சைக்காக மாதம் ஒரு முறை லண்டன் சென்று வரும் சமந்தா, அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிளாமரான சமந்தா
இது ஒருபுறம் இருக்க, அஞ்சான் படத்தில் கூடுதல் கிளமராக நடித்து வரும் சமந்தா, தனது சரும பளபளப்பை அதிகரிக்க, லண்டன் செல்வதாகவும் கூறுகின்றனர். எது உண்மையோ, சமந்தாவிற்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











