சமந்தாவின் கவர்ச்சி உடைக்கு குவிந்த ஆபாச ட்ரோல்கள்.. கடுப்பாகி என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியான மரகத பச்சை நிற கவுன் அணிந்து சமீபத்தில் சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவரது உடையை பார்த்து ரசிகர்கள் ஒருபக்கம் வர்ணித்து தள்ள, மற்றொரு புறம் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்தன.
ஆபாச கமெண்ட்டுகளும் நடிகை சமந்தாவை பற்றியும் அவர் அணிந்திருக்கும் உடையை பற்றியும் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சமந்தா.

ஸ்டன்னிங் சமந்தா
நூடுல்ஸ் ஸ்ட்ராப் உடன் கூடிய படுகவர்ச்சியான மரகத பச்சை கவுன் அணிந்து கொண்டு நடிகை சமந்தா சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் டிரெண்டாகின. சமந்தாவின் இந்த புதிய லுக் ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆபாச கமெண்ட்ஸ்
நடிகை சமந்தா கவர்ச்சி பொங்க உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த நிலையில், அவரது உடை டேஸ்ட்டையும் சமந்தாவையும் பற்றி ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளும் ட்ரோல் மீம்களும் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், உடனடியாக நடிகை சமந்தா அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு போஸ்ட்டை பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆடையை வைத்து
பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்த்து, நிறம் என ஒரு பெரிய லிஸ்ட்டே நீண்டு கொண்டிருக்கிறது.

2022ல் இருக்கிறோம்
நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும், பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து இப்படி ஜட்ஜ் பண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களது ஆடை பற்றி யாருமே பேசக் கூடாது என்றும் சமந்தா கூறியுள்ளார். பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு சுய முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

டிசர்ட் சர்ச்சை
பெண்கள் அணியும் ஆடையை வைத்து யாரும் அவர்களை எடை போடக் கூடாது என நடிகை சமந்தா போஸ்ட் போட்டிருக்கும் நிலையில், ஆபாச வார்த்தைகள் அடங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு பெண்கள் வெளியே சுற்றுவது சரிதானா? என்றும் நெட்டிசன்கள் பதில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சரக்கு விளம்பரம்
மேலும், கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், கவர்ச்சி குத்தாட்ட பாடல்களிலும், சரக்கு விளம்பரங்களிலும் இப்படி தாராளமாக நடித்து வருவது ஏன்? என்றும், அதே 2022ல் நடிகைகள் இப்படி கிளாமர் உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என ஏன் கருதுகின்றனர்? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











