அதெல்லாம் ரொம்ப தவறு.. நாக சைதன்யா - சோபிதாவை தாக்கினாரா சமந்தா?.. பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் அறிமுகமான அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் தெலுங்கில் நடிக்கும்போது நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்த அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய ரோலில் வந்த அவர் பிறகு ஹீரோயினாகி மின்னினார். தமிழில் மட்டும் நிலைத்திருந்த அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடித்திருந்தார்.

மலர்ந்த காதல்: படத்தில் காதல் வழிந்தோடியது போல் இருவருக்குள்ளும் காதல் பெருக்கெடுத்தது. ஆனால் நாக சைதன்யாவின் குடும்பம் தெலுங்கு திரையுலகின் பவர் சென்ட்டர்களில் ஒன்று என்பதால் எளிதாக இந்தக் காதலுக்கு அந்த வீடு ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் சைதன்யா தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் நாகார்ஜுனா அந்தக் காதலை திருமணத்தில் முடிக்கலாம் என்று ஒத்துக்கொண்டார். பெரிய குடும்பத்து மருமகளாகிவிட்டார் சமந்தா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
திருமணம் டூ பிரிவு: கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடந்தது. ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோலாகலமாக நடந்ததை அடுத்து; இரண்டு பேரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். சமந்தாவும் தனது திருமணத்துக்கு பிறகு சினிமாக்களில் நடிப்பதை விடவில்லை. ஆனால் இது நாகார்ஜுனாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெற்றார்கள்.
இரண்டாவது திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அந்தக் காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. சோபிதாவும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்னும் அடுத்த திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும் அவரது அப்பாவும் கடந்த வருடம் தவறிவிட்டார்.
சமந்தாவின் பேட்டி: தற்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கும் சமந்தா, நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து என்ன நினைப்பார் என்று பலரும் எண்ணியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவர்களது திருமணம் குறித்தும் தன்னுடைய நிலைப்பாடு குறித்தும் மறைமுகமாக பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "ஒரு பெண்ணாக இருக்க திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு இங்கே இருக்கிறது.
அப்படி இல்லை: ஆனால் ஒரு பெண் அப்படி இல்லை என்றால்; அவர் சோகமாகத்தான் இருக்கிறார், தனிமையாகத்தான் இருக்கிறார் என்று கருதுகிறார்கள். அது மிகப்பெரிய தவறு. அதில் உண்மையும் இல்லை. ஒரு பெண் தானாகவே, தனியாகவே மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











