நாக சைதன்யாவை இன்னும் மறக்காத சமந்தா?.. திருமண மோதிரத்தை என்ன செஞ்சிருக்காரு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் அறிமுகமான அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் தெலுங்கில் நடிக்கும்போது நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தா செய்திருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்த அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய ரோலில் வந்த அவர் பிறகு ஹீரோயினாகி மின்னினார். தமிழில் மட்டும் நிலைத்திருந்த அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடித்திருந்தார்.

மலர்ந்த காதல்: படத்தில் காதல் வழிந்தோடியது போல் இருவருக்குள்ளும் காதல் பெருக்கெடுத்தது. ஆனால் நாக சைதன்யாவின் குடும்பம் தெலுங்கு திரையுலகில் பவர் சென்ட்டர்களில் ஒன்று என்பதால் எளிதாக இந்தக் காதலுக்கு அந்த வீடு ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் சைதன்யா தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் நாகார்ஜுனா அந்தக் காதலை திருமணத்தில் முடிக்கலாம் என்று ஒத்துக்கொண்டார். பெரிய குடும்பத்து மருமகளாகிவிட்டார் சமந்தா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
திருமணம் டூ பிரிவு: கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடந்தது. ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோலாகலமாக நடந்ததை அடுத்து; இரண்டு பேரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். சமந்தாவும் தனது மணத்துக்கு பிறகு சினிமாக்களில் நடிப்பதை விடவில்லை. ஆனால் இது நாகார்ஜுனாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவு, சமந்தாவும் விவாகரத்து பெற்றார்கள்.

இரண்டாவது திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அந்தக் காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. சோபிதாவும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்னும் அடுத்த திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும் அவரது அப்பாவும் கடந்த வருடம் தவறிவிட்டார்.
ராஜுடன் காதல்?: இப்போதுவரை சிங்கிளாக இருக்கும் சமந்தா விரைவில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். மேலும் இயக்குநர் ராஜ் என்பவரை சமந்தா காதலித்துவருவதாகவும் இரண்டு பேரும் டேட் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவும் இதுகுறித்து இதுவரை எதுவுமே பதில் சொல்லாமல் இருக்கிறார். அதேசமயம் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டையெல்லாம் பார்க்கும்போது சாம் காதலிக்கிறாரோ என்று சந்தேகம் எழுவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
திருமண மோதிரம்: இந்நிலையில் நாக சைதன்யாவை திருமணம் செய்தபோது தன்னுடைய கைகளுக்கு போடப்பட்ட மோதிரத்தை சமந்தா என்ன செய்திருக்கிறார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது அவர் அந்த மோதிரத்தை டாலராக மாற்றி செயினில் அணிந்திருக்கிறாராம். அந்த செயினோடுதான் இன்னமும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாராம். இதனைப் பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யாவை சமந்தா இன்னமும் மறக்கவில்லையோ என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











