ப்பா.. கன்னா பின்னா கவர்ச்சியால இருக்கு.. காஸ்மோபாலிடன் கவர் போட்டோவுக்கு சமந்தா கொடுத்த ஹாட் போஸ்!
சென்னை: நடிகை சமந்தா காஸ்மோபாலிடன் கவர் போட்டோவுக்கு கொடுத்த படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், குத்துப் பாட்டு, கவர்ச்சி உடை என அசத்தி வருகிறார் சமந்தா.
சமந்தாவின் கவர்ச்சியான உடைகளுக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், 2022லும் பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து எடை போடக் கூடாது என காட்டமான போஸ்ட் ஒன்றையும் சமீபத்தில் பதிவிட்டு இருந்தார்.

சமந்தா 2.0
நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சுடிதார், சேலை என ஹோம்லி லுக்கில் தான் படங்களில் கூட நடித்து வந்தார் நடிகை சமந்தா. சீமராஜா, ஓ பேபி, ஜானு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு படு போல்டான காட்சிகளில் நடிகை சமந்தா நடித்ததில் இருந்தே சமந்தாவின் வெர்ஷன் 2.0 வை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலில் அந்த அளவுக்கு உச்ச பட்ச கவர்ச்சி காட்டி நடனமாடி இருந்தார் சமந்தா. அந்த பாடல் இந்தியா முழுவதும் செம ஹிட் ஆன நிலையில், பாலிவுட், டோலிவுட் என பல இடங்களில் இருந்தும் நடிகை சமந்தாவை ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா 2ம் பாகத்திலும் சமந்தாவின் டான்ஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கதீஜா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள விஜய்சேதுபதி, நயன்தாராவின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. சமீபத்தில் அந்த படத்தை முழுவதுமாக முடித்து விட்டோம் என கேக் வெட்டி கொண்டாடினர். வரும் ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸ்மோபாலிடன் கவர் போட்டோ
இந்நிலையில், இணையத்தை மேலும், சூடாக்கும் வகையில் நடிகை சமந்தா காஸ்மோபாலிடன் கவர் போட்டோவிற்காக கொடுத்த பிகினி போஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்துள்ளார். ஸ்லீவ்லெஸ் பிரின்டட் பிகினியில் நடிகை சமந்தா படு கவர்ச்சியாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

1.7 மில்லியன் லைக்ஸ்
நடிகை சமந்தா ஷேர் செய்த அந்த போட்டோவிற்கு இதுவரை 1.7 மில்லியன் லைக்குகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்துள்ளன. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கமெண்ட் பக்கத்தில் ஃபயர் போட்டு, கார்ஜியஸ் சமந்தா என வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
Recommended Video

குவியும் ட்ரோல்கள்
அதே நேரத்தில் நடிகை சமந்தா இவ்வளவு கிளாமராக ஏன் போட்டோக்களை வெளியிடுகிறார் என்று சில நெட்டிசன்கள் திட்டியும், இது என்னவோ போட்டோஷாப் செய்தது போல இருக்கே என்றும் மார்ஃபிங்கா என்றும் கலாய்த்து வருகின்றனர். சமந்தாவின் ரசிகர்கள் அதிக அளவில் இந்த அட்டை படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











