Samantha: ஒரே ஒரு பல்டி.. ஒட்டுமொத்த இணையமும் காலி.. சக்கைப் போடு போடும் சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா படு கவர்ச்சியாக ஒர்க்கவுட் செய்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது. சென்னை பெண்ணான நடிகை சமந்தா ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதில் தீவிரமாகவே உள்ளார்.
நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது டிரான்ச்பரன்ட் ஜிம் உடையில் வொர்க்கவுட் செய்வது, துண்டை கட்டிக் கொண்டு குளிக்கும் போட்டோக்களை வெளியிடுவது, பிகினி புகைப்படங்கள் வெளியிடுவது என படு சுதந்திரமாக தனக்கு பிடித்ததை செய்து வருகிறார்.

சமந்தாவின் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு தொடர்ந்து அவர் கவர்ச்சி ட்ரீட் வைத்து வருவதால் ரசிகர்கள் பலரும் செம ஹேப்பியாகி உள்ளனர். அடுத்து தளபதி விஜய் ரசிகர்களும் சமந்தாவின் வருகையால் சந்தோஷமடைய காத்திருக்கின்றனர் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.
தளபதி 69 ஹீரோயின்: கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை திரிஷாவுக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் கொடுத்தார். அடுத்ததாக வசீகரா படத்தில் நடித்த சினேகா தி கிரேட்டஸ்ட் ஆஃப் பார்ட் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கத்தி மற்றும் மெர்சல் படங்களில் நடித்த சமந்தா தளபதி விஜய்க்கு ஜோடியாக 69-வது படத்தில் இளைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடேங்கப்பா பல்டி: நடிகை சமந்தா மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து தன்னை வலுப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோ ஒன்றில் அவர் வில்லாக வளைந்து யோகா செய்வது போல செய்து அப்படியே பல்டி அடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
பார்த்து கிழியப் போகுது: மேலும், உடற்பயிற்சிக்காக நடிகை சமந்தா அணிந்துள்ள உடலை ஒட்டிய ஜிம் உடைகளை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மற்றொருபுறம் ரசிகர்கள் பார்த்து கிழிந்துவிடப் போகுது என பதறி வருகின்றனர்.

கம்பேக் குயின்: சமந்தா இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டார் அவரால் சில மணி நேரங்கள் கூட சூட்டிங்கில் தாக்குபிடிக்க முடியாது அந்த அளவுக்கு அவரது உடல்நிலை சரி இல்லாமல் உள்ளது என ஏகப்பட்ட வதந்திகள் சமந்தாவை சுற்றி வலம் வந்த நிலையில் அவருக்கு பல பட வாய்ப்புகள் குறைந்தன. அது எல்லாம் மாற்றுவதற்காக சினிமாவுக்கு சிறிது இடைவெளி விட்ட சமந்தா மீண்டும் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி படம், பாலிவுட்டில் ஷாருக்கான் படம் மற்றும் தமிழில் விஜய்க்கு ஜோடியான வெயிட் காட்ட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே சமந்தாவின் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேக் சர்ச்சை: ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து நடிகை சமந்தாவும் ஃபேக் சர்ச்சையில் சமீபத்தில் சிக்கினார். சமந்தா நிர்வாணமாக குளிக்கும் போட்டோவை வெளியிட்டார் என வெளியான புகைப்படம் போலி என்பதை ரசிகர்கள் சுட்டிக் காட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப்சீரிஸுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். நாக் அஸ்வின் கல்கி 2ம் பாகத்தில் சமந்தாவுக்கும் ஒரு நல்ல ரோல் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











