ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்

By Shankar

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திடீரென கருத்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா மற்றும் அவர் காதலன் சித்தார்த்தை செம்மையாக கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர் டோலிவுட்டில்.

'ஆம் ஆத்மி' கட்சி டெல்லி தேர்தலில் கணிசமான இடங்களை வென்றதிலிருந்து திரையுலகில் ஒவ்வொருவராக அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Samantha supports Aam Admi

நடிகர் விஷால் கூட சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தப் பட்டியலில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"ஆம் ஆத்மி' கட்சி ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் டெல்லியில் இருந்து ஆரம்பாகி இருப்பது இன்னும் சிறப்பு," என்று கூறியுள்ளார்.

இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் ஆம் ஆத்மியோ, ஒரு சராசரி அரசியல் கட்சியைப் போலவே, வெற்றிக்குப் பிறகு தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியில் வென்றவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக வேறு அரவிந்த் கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையெல்லாம் கவனித்த ஆந்திர சினிமா உலகினர், ஆம் ஆத்மியும் ஒரு சராசரி கட்சிதான். ஆனால் என்னவே இவர்கள்தான் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல சமந்தாவும் சித்தார்த்தும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்களே என்று கிண்டலடித்துள்ளனர்.

டோலிவுட் எனும் தெலுங்கு சினி்மாவில் உள்ள நடிகர் நடிகைகள் பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் என ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்தே செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X