நான் அப்போது சுத்தமாக சரியில்லை.. அவர்களிடம் அவ்வளவு கெஞ்சினேன்.. மனம் திறந்து பேசிய சமந்தா

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்றார்கள். சமந்தாவை பிரிந்த பிறகு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் சைதன்யா. சமந்தா தனது சினிமா கரியரில் கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் இந்த மாதம் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகவிருக்கும் சூழலில் சாம் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். நாக சைதன்யாவும் அவருக்கு ஃபுல் சப்போர்ட்டே செய்துவந்தார். ஆனால் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்தது சைதன்யாவின் வீட்டுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

samantha citadel raj amp amp dk

விவாகரத்து பெற்ற சமந்தா: ஆனால் மாமனார் வீட்டுக்கு பிடிக்கவில்லையென்றாலும் தனது நடிப்பில் தொடர்ந்து பிஸியாக இருந்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. விவாகரத்து பற்றி சமந்தாவும் இன்றுவரை வாயை திறக்கவில்லை.

சைதன்யாவின் இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக டேட்டிங், மீட்டிங் என்று இருந்தார்கள். மகனின் இரண்டாவது காதலை தெரிந்துகொண்ட நாகார்ஜுனா உடனடியாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் ராஜஸ்தானில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சமந்தா: மையோசிடிஸ் நோய் காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சிட்டாடல் ஹனி பனி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் தவிர்த்து தமிழ், ஹிந்தி படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் சிட்டாடல் வெப் சீரிஸ் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட சமந்தா பேசுகையில், "நான் ராஜ்&டிகேவிடம் கெஞ்சினேன். ஏனெனில் என்னால் அதனை செய்ய முடியும் என்று நினைக்கவே இல்லை (சிட்டாடல் வெப் சீரிஸ்). இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. நன்றாகவே கெஞ்சினேன்.நான்கு ஆப்ஷன்களையும் அவர்களிடம் கொடுத்தேன். அந்த ஹீரோயினை பாருங்கள் எப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஏனெனில் அந்த சமயத்தில் நான் சுத்தமாகவே சரியில்லை. ஒருகட்டத்தில் நான் இதை செய்வேன், என்னால் செய்ய முடியும் என நினைத்துக்கொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X