சில தவறுகளை செய்திருக்கிறேன்.. உண்மையை ஒத்துக்குறேன்.. மனம் திறந்த சமந்தா.. ரொம்ப ஃபீல் பண்ணுறாரே

சென்னை: நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கமிட்டான படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

samantha naga chaitanya

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பினார்கள். அவர்களது விவாகரத்து அறிவிப்பு திரையுலகினரிடம் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் ஷாக்கை கொடுத்தது.

இரண்டாவது திருமணம்: இதனையடுத்து மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சிம்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இப்படி சைதன்யாவும், சமந்தாவும் தத்தமது வழிகளில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா அவதூறாக பேசினார். அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

சிட்டாடல்: இதற்கிடையே சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அவர். சீரிஸானது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. இந்த வெப் சீரிஸில் ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியிருக்கிறார் சமந்தா. இந்தச் சூழலில் வெப் சீரிஸ் ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய சமந்தா சில விஷயங்களை தெரிவித்திருக்கிறார்.

சமந்தா பேட்டி: அவர் பேசுகையில், "நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது உண்மைதான்.இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் எனக்கு சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ தனது கடந்த கால தவறாக திருமணத்தை அவர் சொல்கிறாரா இல்லை தான் தேர்ந்தெடுத்த கதைகளை சொல்கிறாரா என்று கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார். முன்னதாக நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X