வேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா?
ஹைதராபாத்: மஜிலி படத்தில் தனது கணவர் நாகசைதன்யா நடிகை திவ்யான்ஷாவுடன் சேர்ந்து முத்தக் காட்சியில் நடித்தது பற்றி பேசியுள்ளார் சமந்தா.
சிவா நிர்வானா இயக்கத்தில் நாகசைதன்யா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான மஜிலி அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக நாகசைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து நடித்துள்ளனர்.
கணவனும், மனைவியும் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முத்தக் காட்சி
டீஸரில் நாகசைதன்யா திவ்யான்ஷா கவுஷிக்கிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. அந்த முத்தக் காட்சியினாலேயே டீஸர் பிரபலமானது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சமந்தாவிடம் அந்த முத்தக் காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சமந்தா
ரங்கஸ்தலம் படத்தில் நீங்களும், ராம் சரணும் முத்தக் காட்சியில் நடித்தபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் நாகசைதன்யாவுக்கு அப்படி இல்லை என்று சமந்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எனக்கும் சைதன்யாவுக்கும் இடையே அருமையான உறவு, நட்பு உள்ளது. நடிப்புக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றார்.

படங்கள்
என்னை பொறுத்தவரை நான் நடிக்கும்போது கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் ஒன்று தான். இந்த விதிமுறை எங்கள் இருவருக்கும் பொருந்தும் என்பதை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு திருமணமாகிவிட்டது, அவருக்கும் தான். அதனால் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டாம் என்கிறார் சமந்தா.

திருமணம்
சமந்தா ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரண் தேஜாவுடன் முத்தக் காட்சியில் நடித்தபோது திருமணமான பெண் இப்படியா நடிப்பது என்று ஆளாளுக்கு விமர்சித்தார்கள். ஆனால் தற்போது நாகசைதன்யா முத்தக் காட்சியில் நடித்ததை யாருமே கண்டுகொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











