கிஸ் சீன்.. குட்டி ட்ரெஸ்.. உதைப்பாங்க.. பிரச்னை அங்கே இருக்கு.. என்ன சமந்தா ஓபனாக சொல்லிட்டாங்க

சென்னை: உடல்நல குறைவால் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் அவர் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். சமந்தாவும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமந்தாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே தமிழ், தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. அவரது அழகும், திறமையும் சமந்தாவை முன்னணி ஹீரோயினாக்கியது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து அதகளம் செய்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார் சாம். இப்படிப்பட்ட சூழலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார்.

samantha naga chaitanya nagarjuna

பிரிவில் திருமணம்: இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள். ஆனால் சில வருடங்கள் மட்டுமே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது. ஏதோ காரணங்களால் அவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றார்கள். திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விவாகரத்துகளில் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார் சமந்தா.

அரிய வகை நோய்: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை மையோசிடிஸ் எனும் அரிய வகை நோய் சமந்தாவுக்கு வந்தது. அதற்காக தீவிர சிகிச்சை எடுத்து இப்போது மீண்டிருக்கும் அவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவருகிறார். மேலும் சில தமிழ் படங்களிலும், ஹிந்தி படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது திருமணம் ஹைதராபாத்திலோ அல்லது ராஜஸ்தானிலோ நடைபெறலாம் என்று கருதப்படுகிறது. நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு சமந்தாவும் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. அதேசமயம் சமந்தாவை வேண்டுமென்றே பிரிந்திருக்கிறார் சைதன்யா என்று சாமின் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவரிடம் தொகுப்பாளினி, இப்போ சில நடிகைகள் கிஸ் சீனில் நடிக்கமாட்டேன், குட்டி ட்ரெஸ் போடமாட்டேன் என்று சொல்கிறார்களே என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, “இப்போது வந்து நான் கிஸ் சீனில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன அதெல்லாம் செய்ய மாட்டியா என்று கேட்டு என்னை உதைப்பார்கள்.

ஏனெனில் முதல் படத்திலேயே நான் அதையெல்லாம் செய்துவிட்டேன். எனவே பிரச்னை அங்கே இருக்கிறது. அதனால் இப்போது நோ சொல்வது சரியாக இருக்காது" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் திருமணத்துக்கு பிறகும் சமந்தா இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்ததால்தான் பிரச்னை ஆரம்பித்ததோ என சந்தேகத்தை கிளப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X