Samantha - முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்றால் உதைப்பார்கள்..என்ன சமந்தா ஓபனா பேசிட்டாங்க?

சென்னை: நடிகை சமந்தா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் அறிமுகமான அவர் தெலுங்கு மொழியிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியவர். தெலுங்கில் நடித்தபோது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. இந்தச் சூழலில் முத்தக் காட்சியில் நடிப்பது குறித்து சமந்தா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து பரஸ்பரமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Samantha Talks about Kissing Scene That Interview goes trendin on Social Media

சமந்தாவின் கிராஃப்: விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.

மீண்டும் படங்களில்: மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பிய சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க கமிட்டானார்.

மீண்டும் சிகிச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மீண்டும் நோயின் தீவிரம் அதிகரித்ததாக தகவல் வெளியான சூழலில் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அவர் அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் நடிக்கிறார்.அதன் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடந்துவருகிறது. இதுமட்டுமின்றி வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடி வாங்கிய குஷி: அவரது நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்தார். சாகுந்தலம் படத்தில் வாங்கிய அடிக்கு குஷியில் மருந்திட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார் சாம். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தக் காட்சி: இந்நிலையில் சமந்தா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு பேட்டியில் நெறியாளர் சமந்தாவிடம், "சில நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொல்வார்கள். அதுபோல் உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் இருக்கின்றனவா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, 'முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நான் இப்போது சொன்னால் உதைக்கத்தான் செய்வார்கள். முதல் படத்திலேயே எல்லாமே பண்ணியாச்சு. இப்போதுபோய் முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று சொல்லலாமா' என்று குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X