அவர்தான் எல்லாமே.. கொஞ்ச காலம் இருந்தாலும் நன்மைதான்.. ஓபனாக சொன்ன சமந்தா..செம போல்டா பேசிட்டாங்களே
சென்னை: சமந்தா நடிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் சிட்டாடல் ஹனி பன்னி. ஏற்கனவே இவர்கள் சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருந்தார். அந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த சூழலில் இப்போது சிட்டாடல் மீதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது சமந்தாவின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். நாக சைதன்யாவுடனான அவரது விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடினார். அந்த கவர்ச்சி நடனம் அவரது கரியரை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அப்படிப்பட்ட சமயத்தில் திடீரென அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்து சிகிச்சையை மேற்கொண்டார். ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக சமந்தாவின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படங்களாகவும் அது அமைந்தது. அதனையடுத்து மீண்டும் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அறிவித்து அதன்படியே செய்தார். இதனால் சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சூழல் இப்படி இருக்க ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து ஹிட்டடித்த சிட்டாடல் வெப் சீரிஸை இந்தியாவில் எடுக்க ராஜ் & டிகே முடிவு செய்தார்கள்.
சிட்டாடல் ரிலீஸ்: ஏற்கனவே ஃபேமிலி மேன் சீரிஸ் மூலம் ஹிட்டடித்த அந்தக் காம்போ சிட்டாடல் ஹனி பன்னி சீரிஸில் சமந்தாவை நடிக்க வைத்திருக்கிறது. சமந்தாவும் நடிக்க ஒத்துக்கொண்டு சின்சியராக நடித்தார். உடல்நல பிரச்னைகளையும் கடந்து அவர் இந்த சீரிஸுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தச் சூழலில் சிட்டாடல் வெப் சீரிஸ் சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த சீரிஸுக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர்.
சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா பேசுகையில், "ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது. அப்படி மக்கள் மனதுக்கு நெருக்கமான் வெப் சீரிஸில் நானும் முக்கிய பங்காக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிரியங்கா சோப்ரா அனைத்து பெண்களுக்கும் நல்ல ரோல் மாடலாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும் நம்மை பெரிய அளவில் சிந்திக்க வைக்கும்.
அதிகார ஆளுமை: பிரியங்கா சோப்ராவை பொறுத்தவரை அதிகாரமும், ஆளுமையும் நிறைந்தவராக இருப்பது மட்டுமின்றி அவருடன் பழகுவது அலாதி பிரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கின்றன. நாம் திறமையானவர்களை சந்தித்து அவர்களுடன் பழகும்போது நமக்கான சவாலும் அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்களின் நட்பு வாழ்க்கையில் கொஞ்ச காலம் கிடைத்தாலும் அது நமது வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய நன்மை" என்றார்.


Click it and Unblock the Notifications











