5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா!

சென்னை : தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை சமந்தா இப்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்

தி ஃபேமிலி மேன் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் இவரது புகழ் ஓங்கி இருக்க மீண்டும் ஃபேமிலி மேன் இயக்குனரின் இயக்கத்தில் புதிய வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண முறிவு திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க இப்பொழுது முழு கவனத்துடன் படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு செல்கிறார். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊஊஊஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் கதிகலங்க வைத்து உள்ளார்.

பாலிவுட்டிலும் கலக்கி கொண்டுள்ளார்

பாலிவுட்டிலும் கலக்கி கொண்டுள்ளார்

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சமந்தா இப்போது மீண்டும் தி ஃபேமிலி மேன் இயக்குனர் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் சிடாடெல் என்னும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்..இதுவரை தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்த சமந்தா இப்போது பாலிவுட்டிலும் கலக்கி கொண்டுள்ளார்.

ஆர் ஆர் ஆர்

ஆர் ஆர் ஆர்

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆர் இப்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராமையா வஸ்தவய்யா, ரபசா,ஜனதா கேரேஜ், பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்த நிலையில் இப்பொழுது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்க இருப்பது டோலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X