புஷ்பா ஒடிடிக்கு வெயிட் பண்ணல.. சமந்தாவின் பாடலுக்கு தான் வெயிட்டிங்.. டிரெண்டாகும் #Samantha

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

புத்தாண்டுக்கே புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய ஓ சொல்றியா பாடலின் முழு வீடியோவையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், அமேசான் பிரைம் ஒடிடியில் இன்று புஷ்பா வெளியாக உள்ள நிலையில், #Samanthaவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சமந்தாவுக்காக

சமந்தாவுக்காக

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுக்காக அல்ல சமந்தாவுக்காகத் தான் தியேட்டரில் புஷ்பா திரைப்படத்தை பார்த்தோம் என்றும் இன்று இரவு 8 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படத்தையும் சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்காகவே பார்க்க போகிறோம் என சமந்தாவின் ரசிகர்கள் #Samantha என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சமந்தா ரிஹர்சல்

சமந்தா ரிஹர்சல்

ஓ சொல்றியா பாடலுக்காக கவர்ச்சிகரமாக நடிகை சமந்தா டான்ஸ் ரிஹர்சல் செய்யும் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பரவிய நிலையில், தற்போது அந்த பாடலின் முழு வீடியோவை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே வெளியான பாடலின் டீசர் காட்சிகளின் ஒவ்வொரு ஷாட் புகைப்படத்தையும் ஷேர் செய்து தங்களின் ஏக்கத்தை எகிற விட்டு வருகின்றனர்.

சம்மு பாப்பா

சம்மு பாப்பா

இதுவரை இல்லாத அளவுக்கு அதீத கவர்ச்சியுடன் நடிகை சமந்தா முதல் முறையாக அல்லு அர்ஜுன் உடன் இணைந்து போட்ட இந்த குத்தாட்ட பாடல் தியேட்டர்களை தெறிக்க விட்ட நிலையில், ஒடிடியில் இன்று வெளியாக உள்ள நிலையில், சமந்தாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

எனக்கே கொடுத்த மாதிரி இருந்துச்சு

எனக்கே கொடுத்த மாதிரி இருந்துச்சு

ஸ்க்ரீனில் சமந்தா முத்தம் கொடுக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் எனக்கே கொடுத்த மாதிரி இருந்துச்சு என மீம்களை போட்டு சமந்தாவின் அழகை ரசிகர்கள் இஷ்டத்துக்கு வர்ணித்து வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் ஹார்ட்டீன்களையும் பதிவிட்டு எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களையும் பாடல் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

Recommended Video

Pushpa Success Meet மேடையில் நடனமாடிய Senthil Rajeswari, DSP, Sunil Kumar
ராஷ்மிகாவை கண்டுக்கல

ராஷ்மிகாவை கண்டுக்கல

அதே நேரத்தில் புஷ்பா படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு நடனமாடிய சாமி சாமி பாடல் வீடியோ ஆதித்யா மியூசிக்கில் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்யவில்லை. சமந்தாவின் ஐட்டம் நம்பர் பாடலுக்கே ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X