தயாரிப்பாளர்களுக்கு எதிராகப் பேசி சர்ச்சையில் சிக்கிய சமந்தா
சமந்தா வாயைத் திறந்தாலே சர்ச்சைதான் என்றாகிவிட்டது. அவரும் அதைப் பற்றியெலம்லாம் கவலைப்படாமல் மனசுக்குத் தோன்றியதை பேடி வைக்கிறார். அது அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி.
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ஒரு சினிமா விழாவில், "ஒரு படம் ஓடலேன்னா... நடிச்சவங்களை குறை சொல்லக்கூடாது. அந்தக் கதையையும், டைரக்டரையும் தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் மேலதான் தப்பு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏத்துக்கணும்," என்று பேசிவிட்டார்.

சமந்தாவின் இந்தப் பேச்சு தயாரிப்பாளர்களைக் கோபப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மகேஷ்பாபு - சமந்தா நடித்த படம் தோல்வியடைந்தது. இதனால் மகேஷ்பாபுவிடம் தயாரிப்பாளர்கள் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சமந்தாவின் பேச்சு தயாரிப்பாளர்களைக் கடுப்பாக்கியுள்ளது.
உடனடியாக சமந்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











