சித்தார்த்தின் காதலிக்கு இன்று 25வது பிறந்தநாள்
ஹைதராபாத்: சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சென்னையில் வளர்ந்த சமந்தா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் தமிழில் நடித்த பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
அதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

25வது பிறந்தநாள்
தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சித்தார்த்துடன் காதல்
ஜபர்தஸ்த் தெலுங்கு படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் இடையே காதல் மலர்ந்தது

எப்பொழுது கல்யாணம்?
விரைவில் சமந்தாவுடன் திருமணம் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார். ஆனால் எப்பொழுது என்று இருவரும் இதுவரை சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











