For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீரென சமந்தா இப்படி சிக்குன்னு சிக்ஸ்பேக்குக்கு மாற காரணம் என்ன? வைரலாகும் தகவல்!

  |

  சென்னை: நடிகை சமந்தா கடுமையான வொர்க்கவுட் செய்து தனது இடையழகை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி உள்ள புகைப்படம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  பொதுவாக நடிகர்கள் தான் புதிய படங்களுக்காக சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாறுவார்கள். இந்த நிலையில், நடிகை சமந்தா இப்படி திடீரென சிக்ஸ்பேக் வைக்க என்ன காரணம் என்கிற கேள்வியும் அது தொடர்பான தகவல்களும் இணையத்தில் வைரலாக வலம் வர ஆரம்பித்துள்ளன.

  சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை ஏகப்பட்ட முன்னணி நடிகைகளே வாயை பிளந்து ரசித்து லைக்குகளை அள்ளி வீசி உள்ளனர்.

  ரசிகர்கள் காதல் சொன்னால் என்னோட ரியாக்ஷன் இதுதான்.. நடிகை ராஷி கன்னா ஓப்பன் டாக்!ரசிகர்கள் காதல் சொன்னால் என்னோட ரியாக்ஷன் இதுதான்.. நடிகை ராஷி கன்னா ஓப்பன் டாக்!

  சமந்தாவை சுற்றும் வதந்தி

  சமந்தாவை சுற்றும் வதந்தி

  நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டார் என்கிற வதந்தி ஒன்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பாக நேரடியாக எந்தவொரு பதிலையும் சொல்லாத நடிகை சமந்தா மறைமுகமாக இப்படி வதந்திகளை பரப்பும் மீடியாக்களை சாடியுள்ளார்.

  சிக்ஸ்பேக் சமந்தா

  சிக்ஸ்பேக் சமந்தா

  திடீரென ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்ப நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள சிக்ஸ்பேக் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. நடிகை சமந்தா ரொம்பவே சிக்கென மாறியுள்ளார். அவரது இடையழகை பார்த்து இன்பதிர்ச்சி அடைந்த பல பிரபலங்கள் வாயை பிளந்து அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  ஹன்சிகா முதல் அனுபமா வரை

  ஹன்சிகா முதல் அனுபமா வரை

  நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் இடையழகை பார்த்த முன்னணி நடிகைகளான ஹன்சிகா, ராஷி கன்னா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஃபயர் எமோஜிகளை போட்டு சமந்தாவின் டிரான்ஸ்பர்மேஷனை கொண்டாடி வருகின்றனர்.

  Family Man 2 Stunt Making Video | Behind The Scenes
  ராஜியின் ராசி

  ராஜியின் ராசி

  ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜியாக நடித்து மிரட்டிய நடிகை சமந்தாவுக்கு ஒரே வெப் தொடர் மூலம் ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் குவிந்து விட்டனர். பாலிவுட்டில் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் சமந்தாவை தேடி வருகிறதாம்.

  பாலிவுட் ஆசை

  பாலிவுட் ஆசை

  தென்னிந்திய நடிகைகளை அவ்வப்போது பாலிவுட் ஆசை பற்றிக் கொள்ளும். பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் சென்று ஏகப்பட்ட ஹிட் படங்களையும் கொடுத்துள்ளனர். காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ருதிஹாசன், ரகுல் ப்ரீத் சிங் என பலரும் பாலிவுட்டில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக நயன்தாரா மற்றும் சமந்தா பாலிவுட் பக்கம் பட்டையை கிளப்ப மும்பை பறந்துள்ளனர்.

  சைஸ் ஜீரோ

  சைஸ் ஜீரோ

  பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் நடிகைகள் உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத ஒரு விதி உள்ளது. சமீபத்தில் மறைந்த சித்தார்த் சுக்லாவின் காதலியான ஷெனாஸ் கில்லும் தனது உடல் எடையை குறைத்ததற்கான காரணமே அதனால் தான் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை சமந்தாவும் அதற்காகத் தான் இப்படி சிக்கென மாறி உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  போட்டிங்

  போட்டிங்

  சமீபத்தில், தனது நண்பர்களுடன் சைக்கிளிங் மற்றும் போட்டிங் செய்த புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் எல்லாம் லூசான டிரெஸ் அணிந்து இருந்ததால் சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அதிரடியாக ஏகப்பட்ட போட்டோக்களை இறக்கி அனலைக் கிளப்பி உள்ளார்.

  சர்வதேச விளம்பரம்

  சர்வதேச விளம்பரம்

  ஒடிடி வெப் தொடரில் நடித்து சர்வதேச அளவில் பிரபலமான நடிகை சமந்தாவுக்கு சர்வதேச விளம்பரங்களும் குவிந்து வருகின்றன. லூயிஸ் வூட்டன் எனும் சர்வதேச பிராண்ட் ஹேண்ட்பேக்கை கையில் உயர்த்திப் பிடித்தபடி போஸ் கொடுத்து தனது இடையழகையும் இஷ்டத்துக்கு காட்டி உள்ளார் சமந்தா.

  English summary
  Actress Samantha Akkineni turns a never seen size zero hot avatar for a new International brand ad photoshoot photos breaks internet on fire.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X