For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு காலில் செருப்பு போடாமல் இப்படி தலை தெறிக்க ஓடுறாரே சமந்தா; காரணம் என்ன சொல்றாங்கனு பாருங்க!

  |

  சென்னை: நடிகை சமந்தா ஒரு காலில் செருப்பு போடாமல் ஓடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

  சகுந்தலம் படத்தில் நடித்து முடித்த நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

  மகன் சாட்சியாக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் லிப்லாக் போட்டோஸ்! மகன் சாட்சியாக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் லிப்லாக் போட்டோஸ்!

  சமீபத்தில், பஸ்சில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி வளையோசை பாடலை ரீக்ரியேட் செய்த காட்சிகள் லீக்காகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

  பெயரை சுருக்கிய சமந்தா

  பெயரை சுருக்கிய சமந்தா

  சமந்தா பிரபு, சமந்தா அக்கினேனி என வைத்திருந்த நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் S என தனது பெயரை சட்டென மாற்றி பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை அளித்தார். தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சகுந்தலம் படத்தை புரமோட் செய்யவே இப்படி செய்தார் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

  கணவரை பிரிந்தாரா

  கணவரை பிரிந்தாரா

  பெயருக்கு பின் இருந்த அக்கினேனியை சமந்தா தூக்கிய நிலையில், கணவரை பிரிந்து விட்டார் என்றும் வதந்திகள் வைரலாகின. ஆனால், அமீர்கான் படப்பிடிப்பில் நாக சைதன்யா பிசியாக இருப்பதால் தான் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட முடியவில்லையாம். மற்றபடி கணவரை சமந்தா பிரிந்தார் என்று வெளியான தகவல்கள் எல்லாமே வதந்தி தான்.

  சிறந்த நடிகைக்கான விருது

  சிறந்த நடிகைக்கான விருது

  தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை சமந்தாவுக்கு சிறந்த சீரிஸ் நடிகைக்கான விருது சமீபத்தில் நடந்த மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த விருது மிகவும் முக்கியமானது என சமந்தா தெரிவித்துள்ளார்.

  கேக் கட்டிங்

  கேக் கட்டிங்

  சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை சமந்தாவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டு வைரலானது.

  ஃபுட் போர்ட் அடித்த சமந்தா

  ஃபுட் போர்ட் அடித்த சமந்தா

  கமலின் சத்யா படத்தில் இடம்பெற்ற வலையோசை பாடலை ரீக்ரியேட் செய்யும் விதமாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட மூவரும் பஸ் படிக்கட்டில் ஃபுட் போர்ட் அடித்து பயணம் செய்த வீடியோவை ரசிகர்கள் மொபைல் கேமராவில் எடுத்து இணையத்தில் கசியவிட்டு வைரலாக்கினர்.

  சிண்ட்ரெல்லா

  சிண்ட்ரெல்லா

  சிண்ட்ரெல்லா கதையில் ஒரு காலில் செருப்பு இல்லாமல் ஓடும் சிண்ட்ரெல்லாவை போல தானும் ஒரு கால் செருப்புடன் ஓடினேன் என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ள சமந்தா? அப்படி ஓடும் அளவுக்கு என்ன அவசரம் வந்தது என்கிற காரணத்தை கூறவில்லை.

  நாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு!
  ரொம்ப க்யூட்

  ரொம்ப க்யூட்

  சமந்தாவின் சிண்ட்ரெல்லா குட்டி ஸ்டோரியை கேட்ட ரசிகர்களும் சில பிரபலங்களும் நீங்க நிஜமாவே சிண்ட்ரெல்லா தான் என்றும், சகுந்தலாவை தொடர்ந்து அடுத்து சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்கப் போறீங்களான்னும், ரொம்ப க்யூட்டா இருக்கு சமந்தா என்றும் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  English summary
  Actress Samantha turns Cindrella with her missing slipper photo goes viral in social media. She currently acting in Kaathu Vaakula Rendu Kaadhal movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X