»   »  படக்குழுவினரே நெகிழும் விதமாக நன்றி சொன்ன சமந்தா.. 'சீமராஜா' ஷூட்டிங் ஓவர்!

படக்குழுவினரே நெகிழும் விதமாக நன்றி சொன்ன சமந்தா.. 'சீமராஜா' ஷூட்டிங் ஓவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமந்தாவின் ட்ரெண்டாகும் சீமராஜா ட்வீட்!- வீடியோ

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமந்தா சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வந்தார்.

'சீமராஜா' படத்தில் சமந்தா தொடர்பான காட்சிகளின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாம். இதற்காக, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

சமந்தா

சமந்தா

சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் மூன்று படங்கள் இந்த மாத இறுதியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தியேட்டர்கள் ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.

சீமராஜா

சீமராஜா

சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடிக்கும் 'சீமராஜா' படத்தில் நெல்லை, தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற ஷூட்டிங்கில் உற்சாகமாக கலந்துகொண்டார் சமந்தா. தற்போது சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

பெஸ்ட் டீம்

இதனையடுத்து அவர் தனது ட்விட்டரில் '24ஏஎம் ஸ்டூடியோவின் தயாரிப்பான 'சீமராஜா' படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன். சீமராஜா படப்பிடிப்பு குழுவினருக்கு என் நன்றி. பெஸ்ட் டீமாக ஆக்கிய சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராமுக்கும் நன்றி' என சமந்தா பதிவு செய்துள்ளார்.

நெகிழ்ச்சி ட்வீட்

சமந்தாவின் பதிவிற்கும் அவரது ஒத்துழைப்பிற்கும் 24ஏம் ஸ்டூடியோஸ் சார்பில் ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டால் நெகிழ்ச்சி அடைந்த சமந்தா ரசிகர்கள் இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

English summary
Samantha continues to act in films after married Naga Chaitanya. Samantha and Sivakarthikeyan acted in the film 'Seemaraja' directed by Ponram. Samantha related scenes shoot for 'Seamaraja' is over. Samantha thanked the film crew for this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X