சீக்கிரமா, அம்மா ஆகணும்...: சமந்தாவின் ’திடீர் ‘ஆசை

சென்னை: வயது கூடிக்கொண்டே செல்வதால், தனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

தமிழில் பாணாக்காத்தாடி மூலம் ரசிகர்களின் மனதில் 'நீதானே என் பொன் வசந்தம்' என சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் சமந்தா.

காதல், கல்யாணம் என சமந்தாவையும், சித்தார்த்தையும் சேர்த்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனக்கு குழந்தை ஆசை வந்து விட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் சமந்தா.

வெளிச்சத்துக்கு வந்த காதல்...

வெளிச்சத்துக்கு வந்த காதல்...

திருப்பதி ஏழுமலையான் புண்ணியத்தில் சமந்தாவும், சித்தார்த்தும் திருப்பதி சென்று குடும்பத்தோடு வழிபட்டது வெட்ட வெளிச்சமானது. அடுத்தது திருமணம் தான் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க சித்தார்த், சில தினங்களுக்கு முன் ‘பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணமுடிப்பேன்' என பரபரப்பைக் கிளப்பினார்.

சினிமாவுக்கு முழுக்கு...

சினிமாவுக்கு முழுக்கு...

ஆனாலும், காதல் புறாக்கள் படவிழாக்களில் ஜோடி போட்டு சுற்றுவது தொடரத்தான் செய்கிறது. கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு திருமண அறிவிப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். சமந்தாவுக்கு தெலுங்கில் 5 படங்களும், தமிழிலும் ஒரு படமும் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் ’அம்மா’ ஆசை...

சமந்தாவின் ’அம்மா’ ஆசை...

இந்நிலையில் சமந்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ''படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது'' என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X