நீதானே இந்தியாவின் 'பொன் வசந்தம்'... மோடி புகழ் பாடும் சமந்தா!
ஹைதராபாத்: இந்தியாவின் நம்பர்-1 தலைவர் மோடி தான் என்றும், அவர்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.
மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி, நான் ஈ மற்றும் நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர், சமந்தா. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகை சமந்தா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது :-

சரியான நேரம்...
நாடாளுமன்ற தேர்தலில் எல்லோரும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும். நல்ல ஆட்சியாளரை தேர்வு செய்ய இதுதான் சரியான நேரம்.

மோடி தான் பெஸ்ட்...
இந்தியாவின் நம்பர்-1 தலைவர் மோடிதான். நம் நாட்டுக்கு அவரைப் போன்ற திறமையான தலைவர் தேவை.

என் ஆதரவு மோடிக்குத் தான்...
பிரதமர் பதவிக்கு மோடிதான் தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு என் ஆதரவு உண்டு' என இவ்வாறு சமந்தா தெரிவித்தார்.

திடீர் அரசியல் ஆதரவு....
பாஜகவுக்கு ஆதரவா, மோடியைப் புகழ்ந்து சமந்தா பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமந்தா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











