Samantha - சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா?.. திரிஷாவின் வாய்ப்பை தட்டி தூக்குகிறாரா?

சென்னை: தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா டாப் ஹீரோயினாக வலம் வந்தார். தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே அவர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பிறகு இருவரும் அவரவர் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து பரஸ்பரமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Samantha Will Act in Salman Khans The Bull Movie

சமந்தாவின் கிராஃப்: விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.

மீண்டும் படங்களில்: மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பிய சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க கமிட்டானார்.

மீண்டும் சிகிச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மீண்டும் நோயின் தீவிரம் அதிகரித்ததாக தகவல் வெளியான சூழலில் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அவர் அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் நடிக்கிறார்.

அடி வாங்கிய குஷி: அவரது நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்தார். சாகுந்தலம் படத்தில் வாங்கிய அடிக்கு குஷியில் மருந்திட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார் சாம். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. அதேசமயம் விஜய் தேவரகொண்டா - சமந்தா இடையேயான ரொமாஸும், கெமிஸ்ட்ரியும் அருமையாக இருந்தது. அதனையடுத்து இரண்டு பேரும் காதலிப்பதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவியது.

இரண்டாவது திருமணமா?: தொடர்ந்து சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதுகுறித்து ரசிகர் ஒருவரே சமூக வலைதளத்தின் மூலம் சமந்தாவிடமே கேட்டுவிட்டார். ஆனால் முதல் திருமணம் செய்துகொண்டு பிரிந்தவர்களைவிடவும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு பிரிந்தவர்கள்தான் அதிகம் என்ற புள்ளிவிவரத்தை சொன்னார் சமந்தா. இதனால் அவர் அடுத்த திருமணம் செய்துகொள்ளமாட்டார் என ரசிகர்கள் பேச தொடங்கியிருக்கின்றனர்.

ரீ என்ட்ரி: இந்த சூழலில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் சமந்தா மீண்டும் நடிக்க வர வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் வெளியானது. அதன்படி சல்மான் கான் நடிக்கவிருக்கும் தி புல் படத்தில் சமந்தாவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் திரிஷாதான் நடிக்கவிருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியான சூழலில் தற்போது சமந்தா நடிக்கிறார் என்று பரவும் தகவலால் திரிஷாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதேசமயம் திரிஷாவுக்கு பதில் சமந்தா நடிக்கிறாரா இல்லை இரண்டு பேரும் இப்படத்தில் நடிக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X