இரண்டாவது திருமணமா வேண்டவே வேண்டாம் சாமி.. ஆனால், குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நடிகை சமந்தா, அனைவரும் வியந்து பார்க்கும் இடத்திற்கு வந்ததற்கு பின்னால், அவரின் பெரிய உழைப்பு இருக்கிறது.

Samantha will adopt the children and become a mother

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் நடித்த சமந்தாவை இரண்டு ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

காதல் திருமணம்: தெலுங்கு ஸ்டார் நாக அர்ஜூனின் மகன் நாக சைத்தான்யாவுடன் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் மீது யார் கண் பட்டதோ, திருமணமான சில ஆண்டுகளிலே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிந்தது. பல கோடிகளை ஜீவானம்சமாக கொடுக்க நாகார்ஜுனா தயாராக இருந்த போதும், 10 பைசா கூட வேண்டாம் என்றார் சமந்தா.

அறியவகை நோய்: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் யசோதா, சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆனால், இதில் குஷி திரைப்படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

சென்னை ஸ்டோரிஸ்: தற்போது சமந்தா அமேசான் பிரைம் வீடியோவுக்காக சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடித்துள்ளார். இதனை ராஜ் & டி.கே ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் சென்னை ஸ்டோரிஸ் திரைப்படத்தில் சமந்தா ரூத் பிரபு ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தாயாராக மாறும் சமந்தா: குஷிப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் திருமணம் வேண்டாம், குழந்தைகள் இருந்தால் போதும் என முடிவு செய்துள்ள சமந்தா, தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X