அல்லு அர்ஜுனை தொடர்ந்து ராம்சரண் உடன் குத்தாட்டம் போடுறாரா சமந்தா?.. இந்த பாட்டுக்கு எத்தனை கோடி?
ஹைதராபாத்: ராம்சரணுக்கு ஜோடியாக ரங்கஸ்தலம் படத்தில் நடித்த நடிகை சமந்தா தற்போது அவருடன் மீண்டும் ஒரு பாடலுக்கு மட்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கிடைக்க வேண்டிய பல பட வாய்ப்புகள் பரிதாபமாக பறிபோனது. மீண்டும் செம ஃபிட்டாக சமந்தா மாறி வரும் நிலையிலும், அவருக்கு முன்பை போல பெரிய படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் சமந்தா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபிகா படுகோன் ஜோடியாக இணைந்து விட்டார். ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வரும் நிலையில், சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அல்லு அர்ஜுன் பண்ண வேலை: புஷ்பா படத்தில் ஐட்டம் டான்ஸராக சமந்தாவை அல்லு அர்ஜுன் மாற்றிய நிலையில், அதன் பின்னர், தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் இன்னமும் சமந்தாவுக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியான சுபம் படத்தில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அடுத்து பங்காரம் படத்தையும் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்து வருவதாக கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் உடன் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தியில் புஷ்பா படம் பெரிதாக ஓடக் காரணமே சமந்தாவின் அந்த குத்தாட்டம் தான் என்றால் அது மிகையல்ல.

ராம் சரண் உடன் குத்தாட்டம்: அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்ட சமந்தா அடுத்ததாக தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ராம்சரணின் பெத்தி படத்தில் தான் சமந்தா அவருடன் இணைந்து ஆடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தாவை ஆட வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தா ஓகே சொன்னால் பாடல் காட்சி படமாக்கப்பட்டுவிடும் என்கின்றனர். புஷ்பா படத்தில் நடனமாட 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், பெத்தி படத்தில் நடனமாட 7 கோடி ரூபாய் வரை வாங்குவாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











