சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்?.. வீட்டில் நடக்கும் ஏற்பாடு?.. இது என்ன புதுசா இருக்கு?

சென்னை: நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதற்கு காரணமாக பல்வேறு யூகங்கள் சொல்லப்பட்டன. சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தவர் சமந்தா. அதற்கு பிறகு மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் சமந்தாவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து பாணா காத்தாடி படத்திலும் ஹீரோயினாக நடித்தார். பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை தொடர்ந்து வெளிக்காட்டினார்.

samantha naga chaitanya

தெலுங்கிலும் என்ட்ரி: தமிழில் அவர் முன்னணி ஹீரோயினாக மாறியதை அடுத்து தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்தார். அதன்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்குமிடையே காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

மையோசிடிஸால் பாதிக்கப்பட்ட சமந்தா: நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு அரிய நோயான மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து மீண்டார். அதனையடுத்து இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் நடித்தார் அவர். அதில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தந்தையை இழந்த சமந்தா: அவரது ரீ என்ட்ரி அவரது ரசிகர்களுக்கும், அவருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. அதேசமயம் சமந்தாவின் வாழ்க்கையில் இன்னொரு சோகமான நிகழ்வும் சமீபத்தில் நடந்தது. அதாவது அவரது தந்தையான ஜோசப் பிரபு சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனவே சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர் “சமந்தாவின் வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு சோகம் நடந்தது. அவரது தந்தை உயிரிழந்துதான் அது. அவர் இறந்த பிறகு சமந்தாவின் தாயும், சகோதரர்களும் வீட்டில் அமர்ந்து பேசினார்கள். அப்போது சமந்தா இனி இப்படி தனியாகவே இருக்கக்கூடாது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்களது உறவினர் வட்டத்திலேயே அவருக்கு ஒரு பையனையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்திருந்தார். அதில் 2025ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் இருந்தன. மேலும் அவற்றில் உங்களுக்கு நம்பிக்கையான அன்பான துணை கிடைப்பார் என்று இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களோ; அடுத்த வருடம் தனக்கு திருமணம் என்பதைத்தான் சமந்தா மறைமுகமாக கூறியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சில மாதங்களுக்கு முன்பு ரசிகரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த சாம், தனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. முதல் திருமணத்தில் நடக்கும் விவாகரத்துகளைவிடவும்; இரண்டாவது திருமணத்தில் நடக்கும் விவாகரத்துகள்தான் அதிகம் என்று புள்ளிவிவரம் கூறுவதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X