தாவணியில் ஸ்வீட் சமந்தா வித் சிவா! - லேட்டஸ்ட் புகைப்படம் ரிலீஸ்

By Vignesh Selvaraj

Recommended Video

தாவணியில் ஸ்வீட் சமந்தா வித் சிவா! - லேட்டஸ்ட் புகைப்படம் ரிலீஸ்- வீடியோ

சென்னை: சமந்தா, திருமணத்திற்குப் பிறகு தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் SK12 படத்தில் தாவணியணிந்து தோன்றி ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார் சமந்தா.

சமந்தாவின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்வீட் சமந்தா

ஸ்வீட் சமந்தா

திருமணம் முடிந்து மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கியுள்ள சமந்தா செம க்யூட்டாக இருக்கிறார். 'இரும்புத்திரை' படத்தில் சேலை அணிந்தபடி செம ஸ்வீட்டாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மெர்சல் ஆனார்கள். இந்நிலையில் சிவாவோடு தாவணியில் க்யூட்டாக இருக்கிறார் சமந்தா.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 22-ல் 'வேலைக்காரன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரப்போகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

பொன்ராம் படம்

பொன்ராம் படம்

சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணியில் இதுவே முதல் படம். இதேபோல சிவகார்த்திகேயன் சமந்தாவுடன் சேர்ந்து நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

மீண்டும் பொன்ராம் - சிவா கூட்டணி

இந்தத் தகவலை இயக்குனர் பொன்ராம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் SK12 மூலம் பொன்ராம் சிவாவுடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தை 24 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூரி, சிம்ரன்

சூரி, சிம்ரன்

ஏற்கெனவே தென்காசியில் இப்படத்தின் 55 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளாக பிப்ரவரி 17-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் சூரி, சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X