எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்தது.. ரப்பர்போல துள்ளுது பார்.. ட்ரெண்டாகும் சமந்தா ஒர்க் அவுட் வீடியோ

சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். முக்கியமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திலும் சமந்தாதான் ஹீரோயின் என்று பேசப்படுகிறது.

சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை திருமணம்வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.

Samantha Thalapathy 69 Tamil Cinema

சமந்தாவுக்கு வந்த பிரச்னை: திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது.

குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.

ரீ என்ட்ரி: சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் ஜோடி?: மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்தில் சமந்தாதான் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதுமட்டுமின்றி கௌதம் மேனன் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும்; அதிலும் சமந்தாதான் ஹீரோயின் என்றும் சொல்லப்படுகிறது.

ஒர்க் அவுட் வீடியோ: இதற்கிடையே சமந்தா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்வது வழக்கம். அந்தவகையில் இப்போது அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த ஒர்க் அவுட்டில் சமந்தா தனது உடலை ரப்பர் போல் வளைத்து அசால்ட்டாக கவர்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X