சமந்தாவின் பிறந்தநாள்.. அடேங்கப்பா இத்தனை கோடி ரூபாய் சொத்து மதிப்பா?.. வாய் பிளந்த ரசிகர்கள்

சென்னை: நடிகை சமந்தா மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom என்கிற சீரிஸில் நடித்துவருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலை ஏற்று தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்துக்கு பிறகு மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகின. அதில் சமந்தாவுக்கும் நல்ல அடையாளமும், வெளிச்சமும் கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிஸியாக ஆரம்பித்தார்.

முன்னணி நடிகை: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்துக்கொண்டார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த சமந்தாவை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படத்தான் செய்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் VTV படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த கௌதம்; ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைத்தார்.

Samantha s 38th birthday Today Here are Details about Her Net Worth

காதல் டூ திருமணம்: அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்க; படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி ஆஃப் கேமராவிலும் இரண்டு பேருக்கும் ஒர்க் அவுட் ஆனது. இதனால் சமந்தா - நாக சைதன்யா காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு நாகார்ஜுனாவும் அவரது குடும்பமும் சப்போர் செய்ததன் காரணமாக இரண்டு பேருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்யப்பட்டது. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

சமந்தாவை தாக்கிய மையோசிடிஸ்: இதற்கிடையே சமந்தாவுக்கு அரிய வகை நோயான மையோசிடிஸ் நோய் வந்தது. அந்த நோய்தான் இரண்டு பேரும் பிரிந்ததற்கு காரணம் என்று பேசப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே அமைதியைத்தான் இந்த விஷயத்தில் தேர்ந்தெடுத்தார்கள். சாமை பிரிந்த சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமந்தாவோ இன்னமும் சிங்கிளாகத்தான் இருந்துவருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும்; அவரும் சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜும் காதலித்துவருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இரண்டாவது இன்னிங்ஸ்: நோய் காரணமாக நடிக்காமல் இருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். வெப் சீரிஸில் கவனம் செலுத்திவரும் அவர் இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom சீரிஸில் நடித்துவருகிறார். இதுதவிர்த்து பட தயாரிப்பிலும் இறங்கி சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கிலும் படங்களில் நடிக்க பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சமந்தாவின் சொத்து மதிப்பு: அவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில்; மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 6 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவர் மொத்தம் 101 கோடி ரூபாய் மதிப்பு சொத்து வைத்திருக்கிறாராம். ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்கள் வைத்திருக்கும் அவரிடம் Jaguar XF, Porsche Cayman GTS, Audi q7, Benz G Wagon உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்ததை, சம்பாதிப்பதை ஸ்கின் கேர் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X