புதிய காதலருடன் துபாய் பயணமா?.. காதலை உறுதி செய்துவிட்ட சமந்தா?.. என்ன செஞ்சாங்க தெரியுமா?

சென்னை: நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில வருடங்கள் வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்றார்.அந்த விவாகரத்துக்கு பலர் பல விஷயங்களை காரணமாக சொல்கிறார்கள். சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.

கோலிவுட், டோலிவுட்டில் டாப் 5 இடத்துக்குள் இருந்த ஹீரோயின் சமந்தா. வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அப்படத்தில் நடித்தபோது அவருக்கும் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு நாக சைதன்யா வீட்டில் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் சூப்பராக கோவாவில் நடந்தது. திருமணத்துக்கு பின்பு சமந்தாவும் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அதற்கு சைதன்யாவின் சப்போர்ட்டும் இருந்தது. ஆனால் சில காலம் கழித்து நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதாக கூறப்பட்ட சூழலில்; இரண்டு பேரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களின் பிரிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மையோசிடிஸ் நோயில் சமந்தா: சூழல் இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தததுதான் அவர்கள் தனி தனியாக வாழ்வதற்கு காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவந்தார்கள். நோய் காரணமாக சாம் சிகிச்சைக்கு சென்றார். இதனால் திரைத்துறையிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்தார். பிறகு சிகிச்சையிலிருந்து மீண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வெளியான இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நடித்த அவர் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்து வரவேற்பை பெற்றார்.

நாக சைதன்யா திருமணம்: இதற்கிடையே சமந்தாவை பிரிந்த சைதன்யா அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் சென்ற ஆண்டுதான் நடந்து முடிந்தது. அவரது 2ஆம் திருமணத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்களோ நீங்களும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். சமந்தாவோ 2ஆவது திருமணத்திலும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார்.

Samantha s Dubai trip photos with director Raj are trending
Photo Credit:

இயக்குநருடன் காதல்: அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே சமந்தாவும், இயக்குநர் ராஜும் காதலித்துவருவதாக கூறப்படுகிறது. ராஜுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரையும், சமந்தாவையும் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்த சூழலில்; ராஜின் முன்னாள் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்த போஸ்ட்டுகள் எல்லாம் அவர்களை மறைமுகமாக சாடியதுதான் என்று ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

துபாயில் சமந்தா: ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் சமந்தா தெரிவிக்கவில்லை. அதேசமயம் அவரும் ராஜுவும் ஜோடியாக அடிக்கடி பொதுவெளிகளில் வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் சமந்தா தற்போது துபாய் சென்றிருக்கிறார். அவருடன் இயக்குநர் ராஜுவும் சென்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. அதாவது அங்கு சமந்தா துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த புகைப்படத்தில் அருகில் இன்னொருவர் இருக்கிறார். அதேபோல் மற்றொரு புகைப்படத்தில் சாம் சன் கிளாஸ் அணிந்திருக்கிறார். அவருக்கு எதிரே ராஜ் நிற்பது அந்த கிளாஸின் மூலம் தெரியவந்திருக்கிறது.

உறுதியான காதல்?: இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, ராஜுவுடன் சமந்தா துபாய் சென்றிருக்கிறார். கண்டிப்பாக இரண்டு பேருக்கும் காதல் இருப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ வாழ்த்துகள் என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை பயங்கரமாக ட்ரெண்டாக்கிவருகின்றனர். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு இனி மறைப்பதற்கு எதுவுமில்லை என்று சமந்தா ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார். தனது காதலை அறிவிக்கத்தான் அப்படி ஒரு வீடியோவை அவர் பகிர்ந்தாரோ என்றும் நெட்டிசன்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X