சமந்தா என் சகோதரி போன்றவர்.. தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள்.. ப்ரீத்தம் பேட்டி!

ஹைதராபாத் : நடிகை சமந்தா , நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர் தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Recommended Video

என் Divorce-கு காரணம்? Samantha Opens Up | வைரலாகும் அதிர்ச்சி தகவல்

நாக சைதன்யா, சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா தன் பக்க விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் சைத்தன்யா இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

பிரிவுக்கு காரணம்

பிரிவுக்கு காரணம்

இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு சிகையலங்கார நிபுணருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே சமந்தா சைத்தான்யாவை விட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிகையலங்கார நிபுணர் ப்ரீதம் ஜுகல்கர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜிஜி சகோதரி

ஜிஜி சகோதரி

இந்த விஷயத்தில் சைதன்யாவின் மௌனம் தன்னை வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார். நான் சமந்தாவை 'ஜிஜி' என்று அழைப்பேன் என்று சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம். நான் அவரை சகோதரியாக நினைக்கும் போது எப்படி எங்களுக்கிடையில் இணைப்பு இருக்க முடியும் என்றார்.

வருத்தம் அளிக்கிறது

வருத்தம் அளிக்கிறது

மேலும் பேசிய அவர், எனக்கு சைதன்யாவை பல வருடங்களாக தெரியும். அவருக்கும் சமந்தாவுக்கும் என்ன வகையான உறவு இருக்கிறது என்பது தெரியும். சமந்தாவை பற்றியும் என்னை பற்றியும் தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள் என்றார், சமந்தா மற்றும் நாக சைத்தன்யா குறித்து பொய்யான வதந்திகளை பரப்புவது அவர்களின் ரசிகர்கள் தான். தவறாக பரவும் வதந்தி குறித்து சைதன்யா ஒரு அறிக்கை கொடுத்து இருந்தால் மக்கள் கட்டுக்குள் இருந்து இருப்பார்கள் அவர் அப்படி செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

மனம் உடையது.

மனம் உடையது.

முன்னதாக சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், கருக்கலைப்பு செய்துள்ளேன் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. விவாகரத்து வலி மிகுந்தது. இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. இனியும் என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு அனுமதிக்க மாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X