கடவுளே ரொம்ப கடினம்.. அப்படி இருக்க ட்ரை செய்கிறேன்.. ஓபனாக பேசிய சமந்தா

சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே க்ளாப்ஸ் எழுந்தது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.

மாடலாக இருந்து பின்னர் சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

samantha tamil cinema kollywood

பிரிவில் முடிந்த திருமணம்: ஆனால் இருவரது திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்து விலகினார்.

தோல்வி படங்கள்: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதனையடுத்து ரீ எண்ட்ரி கொடுத்த அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இதனை இயக்க; வருண் தவான் ஹீரோவாக நடித்தார்.இதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது.

அடுத்த படங்கள்: வெப் சீரிஸில் தனது நடிப்புக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து சமந்தா செம மகிழ்ச்சியில் இருக்கிறாராம். மேலும் அவரை படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க வைக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும்; அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

சமந்தாவின் பதிவு: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னை நான் அறிந்துகொள்வது என்பது என்னையே நேசிப்பதாகும். ஒரு மனிதனின் நரகமாக இருக்க நான் விரும்புகிறேன். கடவுளே நான் பணிவாக இருப்பது மிக கடினம். ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவை பார்த்த ரசிகர்களோ சமந்தாவுக்கு என்னாச்சு இப்படி தத்துவமா பேச ஆரம்பித்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X