அந்தத் தவறை செய்யமாட்டேன்.. பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.. சமந்தா இவ்வளவு விரக்தியா பேசுறாங்க?

சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே க்ளாப்ஸ் எழுந்தது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி Pickle Ball லீக் தொடரில் ஒரு அணியையும் சொந்தமாக அவர் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

மாடலாக இருந்து பின்னர் சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. முதலில் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கும் முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். இந்த இரண்டு படங்களை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார்.

Samantha s Latest Interview Gone Trending on Social Media

பிரிவில் முடிந்த திருமணம்: பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் என மொத்தம் இரண்டு முறை அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் இருவரது திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்தும் விலகினார்.

தோல்வி படங்கள்: நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்ததற்கு மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேரும் எதுவும் பேசாமல் அமைதியாக ஒதுங்கிவிட்டார்கள். அந்த நோயிலிருந்து ஒருவழியாக அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் சமந்தாவின் கரியரிலேயே பெரிய தோல்வி படங்கள் என்ற பெயரை பெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் மீண்டும் சினிமாவிலிருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தார். தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி கொடுத்தார். இதன் காரணமாக அவர் முழுவதுமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டாரோ என்றுதான் நினைக்க தோன்றியது.

Samantha s Latest Interview Gone Trending on Social Media

கம்பேக் கொடுத்த சமந்தா: ஆனால் நல்வாய்ப்பாக அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர்களான ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது. வெப் சீரிஸில் தனது நடிப்புக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து சமந்தா செம மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரை படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க வைக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்பட்டது.

அடுத்த வெப் சீரிஸ்: சிட்டாடல் வெப் சீரிஸுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு வெப் சீரிஸில் அவர் நடித்துவருகிறார். மேலும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் படங்களில் நடிக்க கமிட்டாகியிருபதாக கூறப்படுகிறது. இதுவரை நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் பேனரில் படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும்கூட அவர் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். அதன்படி Pickle Ball லீக் தொடரில் சொந்தமாக ஒரு அணியையும் வாங்கியிருக்கிறார். அவர் வாங்கியதை அடுத்து இயக்குநர் அட்லீயும் ஒரு அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படி சமந்தா பல விஷயங்களில் கவனம் செலுத்திவருவது ரசிகர்களிடையேமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவது திருமணம் செய்யும் சமந்தா?: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனவே சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சாம் தெளிவுப்படுத்தினார். அதேசமயம் சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜுவுடன் சமந்தாவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு பேரும் ஒன்றாக பொதுவெளிகளுக்கும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்களோ என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புவதற்கு மறக்கவில்லை. இந்நிலையில் சமந்தா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

Samantha s Latest Interview Gone Trending on Social Media

சமந்தாவின் பேட்டி: சமந்த அளித்த அந்தப் பேட்டியில், "நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆண்களுக்கு நிகரான வேலைகளைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால் ஏன் என்று தெரியவில்லை ஆண்களுக்கு கொடுக்கும் சம்பளத்துக்கும், எனக்கு கொடுக்கும் சம்பளத்துக்கும் ஏகப்பட வித்தியாசங்கள் இருக்கின்றன. ஹீரோ சென்ட்ரிக் படங்களில் ஹீரோதான் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பார் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அது எனக்கு புரிகிறது. இருந்தாலும் பெண்களும் சமமான வேலையை பார்க்கும்போது இந்த சமபளத்தில் வித்தியாசம் இருப்பதை எப்போதுமே என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

நான் செய்துகொண்டிருக்கும் முயற்சிகள் இதுதான்: நான் இந்த சினிமா துறையில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருக்கிறேன். நான் ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்குதான் முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறேன். எனது வாழ்க்கையில் நடந்த சில சூழ்நிலைகளை நினைத்து என்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. அதேசமயம் என்னுடைய எதிர்காலத்துக்காக என்னால் ஏதாவது செய்ய முடியும்தானே. நான் செய்யாவிட்டால் அதனை வேறு யார் செய்வார்கள். நம்மை தொந்தரவு செய்யும் விஷயங்கள் குறித்து கவலைப்படக்கூடாது என்கிற நோக்கத்தில் இருக்கிறேன் நான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சமந்தா செம பக்குவமாக பேசுகிறார். அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் அவருக்கு அதீத பக்குவத்தை கொடுத்திருக்கிறது என்பதை இந்தப் பேட்டி வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X