யப்பா வேற லெவலுல இருக்காங்களே.. கலக்கும் சமந்தா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: நடிகை சமந்தா மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom என்கிற சீரிஸில் நடித்துவருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சமுக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலை ஏற்று தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்துக்கு பிறகு மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகின. அதில் சமந்தாவுக்கும் நல்ல அடையாளமும், வெளிச்சமும் கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிஸியாக ஆரம்பித்தார்.

முன்னணி நடிகை: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்துக்கொண்டார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த சமந்தாவை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படத்தான் செய்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் VTV படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த கௌதம்; ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைத்தார்.

Samantha s Latest Photoshoot Goes Trending on Social Media
Photo Credit:

காதல் டூ திருமணம்: அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்க; படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி ஆஃப் கேமராவிலும் இரண்டு பேருக்கும் ஒர்க் அவுட் ஆனது. இதனால் சமந்தா - நாக சைதன்யா காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு நாகார்ஜுனாவும் அவரது குடும்பமும் சப்போர் செய்ததன் காரணமாக இரண்டு பேருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்யப்பட்டது. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

சமந்தாவை தாக்கிய மையோசிடிஸ்: இதற்கிடையே சமந்தாவுக்கு அரிய வகை நோயான மையோசிடிஸ் நோய் வந்தது. அந்த நோய்தான் இரண்டு பேரும் பிரிந்ததற்கு காரணம் என்று பேசப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே அமைதியைத்தான் இந்த விஷயத்தில் தேர்ந்தெடுத்தார்கள். சாமை பிரிந்த சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமந்தாவோ இன்னமும் சிங்கிளாகத்தான் இருந்துவருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும்; அவரும் சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜும் காதலித்துவருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இரண்டு பேரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வதையும் வழக்கமாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கிளாமர் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா கிளாமரை கொஞ்சம் தூக்கலாகவே காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X