நாக சைதன்யா திருமணம்லாம் இருக்கட்டும்.. செம பார்ட்டி செய்யும் சமந்தா.. உச்சக்கட்ட வைப்

சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த சீரிஸில் சமந்தாவின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே அவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

விளம்பர படங்களில் நடித்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

samantha naga chaitanya


நிலைக்கவில்லை: ஆனால் இருவரது திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்து விலகினார்.

மிகப்பெரிய தோல்வி படங்கள்: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். இப்போது சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இதனை இயக்க; வருண் தவான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது.

வைப் செய்த சமந்தா: இதற்கிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. ஹைதராபாத்தில் கோலாகலமாக திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சிட்டாடல் வெப் சீரிஸ் ஹீரோ வருண் தவானுடன் ஒரு பார்ட்டியில் பங்கேற்ற அவர்; பேபி ஜான் படத்தின் பாடலுக்கு அவருடன் செமயாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோதான் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

தந்தை மரணம்: முன்னதாக சமந்தாவின் வாழ்க்கையில் இன்னொரு சோகமும் நடந்திருக்கிறது. அதாவது இன்று அவர் தனது தந்தையான ஜோசப்பை இழந்திருக்கிறார். ஜோசப் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் இப்போது இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனி எனது தந்தையை சந்திக்கவே முடியாது என்று கலங்கியபடி போஸ்ட் போட்டிருக்கிறார். அதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X