2வது திருமணம்.. ஹனிமூனுன்னு ஜாலியா இருக்கேன்னு நினைச்சீங்களா.. ஜனவரி 9 சமந்தாவோட ருத்ர தாண்டவம் வருது!

ஹைதராபாத்: வரும் ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜன நாயகன் வெளியாகுமா? ஆகாதா? என்கிற பதற்றத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், அதே ஜனவரி 9ம் தேதி நான் வரேன் என நடிகை சமந்தா தலைவிரி கோலமாக பேருந்துக்குள் நின்றுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அனுஷ்கா நடித்த காட்டி படத்தில் பேருந்துக்குள் அவர் சண்டை போடும் காட்சி வந்ததை போல இந்த முறை சமந்தாவின் பஸ் ஃபைட் சீன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Samantha s Maa Inti Bangaaram Trailer will release on January 9th
Photo Credit:

நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த சமந்தா ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோருவை 2வது திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தனது அடுத்த படத்தின் ஹாட் அப்டேட்டையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் சான்ஸ் கிடைக்கல: நடிகை சமந்தா இந்தியில் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ், சிட்டாடல் வெப்சீரிஸ் என ஆக்‌ஷனில் அதகளம் செய்த நிலையில், அவருக்கு 2வது திருமண வாழ்க்கை தான் கிடைத்ததே தவிர பாலிவுட்டில் ஒரு பட வாய்ப்பும் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. வெளிநாட்டு படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு பிறகு அந்த படத்தின் அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் டிரைலர் வெளியீட்டு அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

போனதுக்கு போன வருஷம்: 2024ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் மா இன்டி பங்காரம் படம் உருவாகப் போவதாக ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு சமந்தா தயாரிப்பில் சுபம் எனும் பேய் படம் வெளியானது. அந்த படத்தில் பேயோட்டி கதாபாத்திரத்தில் கேமியோ ரோலிலும் சமந்தா நடித்திருந்தார். இந்நிலையில், அவர் ஹீரோயினாக நடித்துள்ள படத்தின் டிரைலர் வெளியாகும் அறிவிப்பு சமந்தா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜனவரி 9 டிரைலர்: ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வருமா? வராதா? என்பது இன்று தெரிந்துவிடும். ஆனால், சமந்தா தனது மா இன்டி பங்காரம் படத்தின் டிரைலரை வரும் ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை நன்னாளில் காலை 10 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை நண்டு ரெட்டி இயக்கியுள்ளார். உருவாக்கம் ராஜ் நிடிமோரு என 2வது கணவரும் இந்த படத்துக்காக உழைத்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளனர். 9ம் தேதி டிரைலர் வெளியானால் படம் அடுத்த மாதமே ரிலீஸ் ஆகிவிடும் போல தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X