Maa Inti Bangaram Box Office: சாதித்துக் காட்டிய சமந்தா.. பட்ஜெட்டை விட டபுள் வசூல்.. அடிபொலி!
சென்னை: எந்தவொரு படமாக இருந்தாலும் பட்ஜெட்டை விட பாக்ஸ் ஆபீஸில் ஒரு ரூபாய் அதிகமாக வந்தால் தான் அந்த படம் தப்பிக்கும். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வசூல் டபுளாக வந்தால் படக்குழு ரொம்பவே உற்சாகமடைந்துவிடும்.
நடிகை சமந்தா கருவுற்று இருப்பதை இன்னமும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இயக்குநர் நந்தினி ரெட்டி மீடியாவுக்கு அளித்த பேட்டியில், சமந்தா அம்மாவாக போவதை ஓபனாக போட்டு உடைத்துள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், டபுள் சந்தோஷமாக சமந்தா நடித்த 'எங்கள் தங்கம்' (Maa Inti Bangaram) திரைப்படம் ஞாயிறு வரை செம வசூல் வேட்டையை நடத்தி பட்ஜெட்டை விட டபுள் மடங்கு வசூலை குவித்துள்ளது என்கின்றனர்.
கர்ப்பமான சமந்தா: நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு சிட்டாடல், ஃபேமிலி மேன் போன்ற வெப்சீரிஸ்களை இயக்கி வந்த ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதை ரிவீல் செய்துள்ளார் எங்கள் தங்கம் படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி. சமந்தா மா இன்டி பங்காரம் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடும் போது அவரது பேபி பம்ப் தெரிந்ததாக ரசிகர்கள் வைரலாக்கிய நிலையில், அது உண்மை தான் என்கின்றனர். நடிகை அமலா பாலை போலவே இவரும் 2வது திருமணத்தில் குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார்.
எங்கள் தங்கம் வசூல்: 20 முதல் 25 கோடி பட்ஜெட்டில் சமந்தாவின் ட்ராலாலா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் இதுவரை 41 கோடி வசூலை அள்ளியிருப்பதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு தளங்கள் தெரிவித்துள்ளன. பட்ஜெட்டை விட பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை சமந்தா படம் ஈட்டியுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே 50 கோடி வசூலை கடக்கும் என்றும் அதிகபட்சமாக 100 கோடி வரை வசூலை குவிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடித்துள்ள இந்த படம் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளதே இந்த வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications