திருமணத்தில் 100% கொடுத்தேன்.. குற்ற உணர்வெல்லாம் எனக்கு இல்லை.. ட்ரெண்டாகும் சமந்தாவின் பேட்டி

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார். சூழல் இப்படி இருக்க தனது திருமண வாழ்க்கை குறித்து சமந்தா பேசிய பழைய வீடியோ திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

samantha naga chaitanya

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.

மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

samantha naga chaitanya

நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒருபக்கம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவர; மறுபக்கமோ சமந்தா விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையையும் ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சமந்தா அதுகுறித்து இப்போதுவரை மௌனம் காத்துவருகிறார்.

சமந்தா பேட்டி: சூழல் இப்படி இருக்க சமந்தா தனது விவாகரத்தான திருமண வாழ்க்கை குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் அவருக்கு 100 சதவீதத்தை திருமணத்தில் கொடுத்தேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே நான் செய்யாத ஒரு காரியத்துக்காக என்னை நானே அடித்துக்கொள்வதோ இல்லை நான் குற்ற உணர்வில் இருக்கப்போவதோ இல்லை" என்று குறிப்பிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள்; அட சமந்தா செம அதிரடியா பேசிருக்காங்களே என்று சொல்லி அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

samantha naga chaitanya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X