Samantha - எனக்கு சாப்பாட்டைவிட காமம்தான் முக்கியம்.. சமந்தா ஓபன் டாக்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Samantha (சமந்தா) சாப்பாட்டைவிடவும் எனக்கு காமம்தான் முக்கியம் என சமந்தா பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோவாவில் படு பிரமாண்டமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்தார்.

 Samanthas Old Interview Goes Viral in Social Media

பிரிவில் முடிந்த திருமணம்: ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. இரண்டு பேரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். அதற்கான உறுதியான காரணம் தெரியாவிட்டாலும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்ததாலும் அதிலும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததாலும்தான் நாகார்ஜுனா குடும்பத்தால் பிரச்னை வந்ததாக கூறப்பட்டது.

டாப் கியரில் சமந்தா: திருமணம் முறிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் காலியாகிவிடும் என்றே பலரும் பேசினார்கள். ஆனால் புஷ்பா படத்தில் அவர் ஆடிய நடனம் அவருக்கென்று ரசிகர்களை அதிகப்படுத்தியது. மேலும் பல படங்களில் நடிப்பதற்கு புக்கானார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. திவீர சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஒருவழியாக அதிலிருந்து மீண்டார்.

ரீ என்ட்ரி: ஒருவழியாக சிகிச்சையை முடித்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அவர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அவரது கரியரிலேயே மிகப்பெரிய தோல்வி படமாக அது அமைந்துவிட்டது. இதனால் அவர் ரொம்பவே அப்செட். அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அதுவும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

விலகல்: சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அண்மையில் அறிவித்தார். மேலும் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி கொடுத்தார். அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸில் இந்திய வெர்ஷனில் மட்டும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் ரியாலிட்டி ஷோவுக்கு செல்வது வெளிநாட்டு சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம், உங்களுக்கு சாப்பாடு முக்கியமா இல்லை காமம் முக்கியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு காமம்தான் முக்கியம். நான் எந்த நாளும் பட்டினி கிடக்கலாம் என பதிலளித்தார். இந்த வீடியோவைத்தான் ரசிகர்கள் இப்போது ட்ரெண்டாக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X