அட சமந்தாவா இவங்க.. எப்படி இருந்திருக்காங்க பாருங்க.. ட்ரெண்டாகும் செம வீடியோ
சென்னை: சமந்தா நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ் & டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக சமந்தாவின் நடிப்பும்; அவர் செய்த ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. அடுத்ததாக அவர் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகிவருகிறது.
மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதற்கு முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபல்யம் அடைந்தார். அதனையடுத்து நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், பத்து எண்றதுக்குள்ள, கத்தி, மெர்சல், நான் ஈ என வரிசையாக பல படங்களில் நடித்து கவனிக்கப்படும் நடிகையாக மாறினார் சமந்தா.

திருமணம்: சூழல் இப்படி இருக்க விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அந்தப் படத்தின் ஹீரோ நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்தார். சில வருடங்கள் இரண்டு பேரும் காதலித்தார்கள். முதலில் இந்தக் காதலுக்கு சைதன்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும்; பிறகு ஒத்துக்கொண்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.
பிரிந்த ஜோடி: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். ஆனால் அவர் நடித்தது நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கே விவாகரத்தா என்றுதான் பலரும் யோசித்தார்கள். சைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
சமந்தாவுக்கு வந்த நோய்: அதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் அவர் கமிட்டானார். ஆனால் அப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஒருவழியாக சிகிச்சையை முடித்து நலமுடன் மீண்ட அவர் சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் படுதோல்வியை சந்தித்தன. பிறகு குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சம்மு; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சிட்டாடல்: அதன்படி ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைமில் அந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆனது. அதில் சமந்தாவின் நடிப்பு நன்றாகவே கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் செய்த ஆக்ஷன் காட்சிகளும் வெகுவாக ரசிக்கப்பட்டன. இந்த வெப் சீரிஸ் தவிர்த்து சமந்தா வேறு சில படங்களில் கமிட்டாகியிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஹீரோயினாவதற்கு முன்னதாக சமந்தா சில விளம்பர படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதனைப் பார்த்த பலரும் அட சமந்தாவா இவங்க. இப்போ உள்ள சமந்தாவுக்கும், அப்போ உள்ள சமந்தாவுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











