அப்பாவி புருஷனை ஏன் ஏமாத்துனீங்க.. ரசிகர் கேட்ட கேள்வி.. சமந்தா கொடுத்த பதிலடி
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதுத்தடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார்.
மையோசிடிஸ்: புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் நோய் அவருக்கு வந்தது. இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருவழியாக நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.
குட்டி பிரேக்: சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது. அதிலும் சல்மான் கானுடன் அவர் நடிக்கலாம் என்று பேச்சு எழுந்தது. இதற்கிடையே சிட்டாடல் வெப் சீரிஸில் மட்டும் கமிட்டாகியிருந்தார்.
ரீ என்ட்ரி: இந்தச் சூழலில் அவர் மீண்டும் நடிக்கவிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அல்லு அர்ஜுனுடன் ஒரு படம், விஜய்யுடன் ஒரு படம் ஆகியவற்றில் அவர் நடிக்கவிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. மேலும் பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் சமந்தா. அதில் உடல்நலம் சார்ந்த விஷயங்களை பகிர்ந்துவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் யோகா தொடர்பான பாட்காஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
சமந்தா பதிலடி: அப்போது ரசிகர் ஒருவர்,'உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏன் ஏமாற்றினீர்கள் என்பதை சொல்லுங்கள்' என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, "மன்னிக்கவும் இந்த யோகா நடைமுறைகள் உங்களுக்கு உதவாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு இதைவிட வலிமையான ஒன்று தேவைப்படலாம்.. நன்றாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிலுக்கு ரசிகர்களில் பெரும்பாலானோர் தங்களது ஆதரவையும், வரவேற்பையும் கொடுத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











