Samantha - இரண்டாவது திருமணம் நடக்குமா?.. ரசிகரின் கேள்விக்கு சமந்தா சொன்ன ஷாக் பதில்.. இது வேற இருக்கா
சென்னை: Samantha (சமந்தா) இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா என ரசிகர் கேட்டதற்கு சமந்தா அளித்திருக்கும் பதில் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர். முதலில் சித்தார்த்தை அவர் காதலிப்பதாகவும் ஆனால் சில காரணங்களால் இரண்டு பேரும் காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது. சூழல் இப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது அவரை காதலித்தார்.

திருமணம் டூ பிரிவு: அதனையடுத்து இரண்டு வீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் இரண்டு பேரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு இருவரும் அறிவித்தனர். அதற்கு காரணம் சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடித்ததுதான் என்று பரவலாக பேசப்பட்டது.
கரியர் உச்சம்: திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவால் கரியரில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறிய சூழலில் அதை உடைக்கும்விதமாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் எகிறியது. புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் போட்ட ஆட்டம்தான் அதற்கு காரணம். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துவந்தார்.
மையோசிடிஸ்: ஆனால் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து சில காலம் கழித்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு படங்கள் நடித்து தோல்வியை சந்தித்தார். மேலும் இப்போது சினிமாக்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்திருக்கிறார். இதற்கிடையே குஷி படத்தில் நடித்தபோது விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
அமைதி: ஆனால் இந்த கிசுகிசு குறித்து சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் அமைதியே காத்துவருகின்றனர். அதேசமயம் சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அக்கறையோடு கூறிவந்தனர். இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.
நோ சான்ஸ்: அதற்கு பதிலளித்த சமந்தா, "அது தவறான முடிவு. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம்; இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 67 சதவீதம்; மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











