சமந்தாவின் சீக்ரெட் லவ்வர் யாரு?.. காதலர் தினத்தன்று இப்படியொரு ரொமாண்டிக் போஸ்ட் போட்டிருக்காரே!

சென்னை: நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொண்டு தண்டேல் படத்தின் வெற்றிக்கு காரணமே தனது 2வது மனைவி தான் என பேசிய சமந்தாவை வெறுப்பேற்றி வரும் நிலையில், நாம் மட்டும் சும்மா இருப்பேனா என்கிற ரீதியில் சமந்தா வெளியிட்டுள்ள காதலர் தின போஸ்ட் இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மும்பையை விட்டு கடந்த சில நாட்களாகவே சென்னையில் சுற்றிக் கொண்டிருந்த சமந்தா, தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு விமானம் ஏறி வெளிநாடு சென்றுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Samantha Naga Chaitanya Valentine s Day 2025 2025

மேலும், காதலர் தினத்தை தனியாக ஒருவருடன் கொண்டாடியதை போன்ற இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை தற்போது வெளியிட்டு ரசிகர்களை தலையை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளார் சமந்தா.

காதலில் விழுந்த சமந்தா: நடிகை சமந்தா காதலில் விழுந்துவிட்டார் என்றும் அவரும் சீக்கிரமே தனது திருமணத்தை அறிவிக்கப் போகிறார் என்கின்றனர். அதற்கு ஏற்ற வகையில் சமந்தாவும் தொடர்ந்து காதல் போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார். காதலர் தினமான இன்று ஸ்பெஷலாக ரெடி செய்து வைக்கப்பட்ட படுக்கையறை போட்டோ வரை போட்டு யாரை வெறுப்பேற்ற பார்க்கிறார் சமந்தா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Samantha Naga Chaitanya Valentine s Day 2025 2025

சீக்ரெட் லவ்வர் யாரு?: நடிகை சமந்தா தனியாக ஒரு நபருடன் காதலர் தினத்தைக் கொண்டாடியது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு நபரின் கையை மட்டும் காட்டி இருவரும் இணைந்து ஜூஸ் குடிப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த நபர் தான் சமந்தாவின் காதலரா? என்றும் ரகசிய காதலரை சமந்தா எப்போது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

பிகினி உடையில்: மேலும், கவர்ச்சியான பிகினி உடையில் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படத்தையும் நம்ம செல்ஃபி புள்ள சமந்தா வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு தொழிலதிபர் யாரையோ ஒருவரை வெயிட்டாக சமந்தா பிடித்து விட்டார் என்றும் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சமந்தாவும் காதல் பறவையாக அடிக்கடி வெளிநாட்டில் சுற்றி வந்ததன் காரணமே அவரும் காதலில் விழுந்தது தான் என்றும் கூறுகின்றனர்.

நாக சைதன்யாவை வெறுப்பேற்றவா?: 'Just a TEASE. Or maybe more.' என சமந்தா காதலர் தின ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு போட்டுள்ள கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு காதலர் யாரும் அமையவில்லை. அமைந்திருந்தால், இந்நேரம் வெளிப்படையாகவே போட்டோ வெளியிட்டு இருப்பார். இது சும்மா நாக சைதன்யாவை வெறுப்பேற்ற அவர் பண்ணும் டிராமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமந்தா திடீரென போஸ்ட்டுகளை போடுவதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் விரைவில் தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X