இனி மறைக்க எதுவும் இல்லை.. நாக சைதன்யா பற்றி சொல்லப்போறாரா?.. பரபரப்பை கூட்டிய சமந்தா

சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இவர் ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் வீடியோ பல கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கோலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்தா சமந்தா தெலுங்கிலும் நடித்தார். அப்படி தன்னுடைன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பணியாற்றியபோது நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் என மொத்த இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அதற்கு சைதன்யாவும் தன்னுடைய சப்போர்ட்டை செய்திருந்தார்.

இரண்டு பேருக்குள்ளும் பிரிவு: சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இரண்டு பேரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்தார். நாக சைதன்யாவோ பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலித்தார். பிறகு இந்தக் காதலுக்கும் சைதன்யா வீடு க்ரீன் சிக்னல் கொடுத்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தது.

பிரமாண்ட திருமணம்: அதனையடுத்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் அவர். சமந்தா போலவே சோபிதாவும் தன்னுடைய திருமணத்துக்கு பிறகு நடித்துவருகிறார். அதற்கும் சைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் முழு ஆதரவை கொடுத்துவருகிறார்கள்.

Samantha s video which says she has nothing to hide has gone Trending
Photo Credit:

சமந்தா மீண்டும் காதல்?: இதற்கிடையே சமந்தா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். அவரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில்; அதிலிருந்து நழுவிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில் ஃபேமிலி மேன், சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது ஒன்றாக வருவது அந்தப் பேச்சுக்கு வலிமை சேர்ப்பது போன்று இருக்கிறது.

சமந்தாவின் போஸ்ட்: நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். அதன்படி சுபம் என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இந்நிலையில் அவர் நேற்று ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் கேமராவை நோக்கி நடந்துவரும் அவர்; அதில் Nothing to Hide என்று எழுதுகிறார். இதனால் ரசிகர்களுக்கு சில கேள்விகள் எழுந்திருக்கின்றன.

என்ன கேள்விகள்?: அதாவது, இனி மறைக்க எதுவும் இல்லை என்று சமந்தா சொல்வதன் மூலம் தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், நாக சைதன்யா குறித்து பல விஷயங்கள் உள்ளிட்டவைகளை விரைவில் வெளியிடப்போகிறாரா இல்லை இரண்டாவது காதலில் விழுந்துவிட்டேன் என்று சொல்லப்போகிறாரா என பல கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நாக சைதன்யாவும் சமந்தாவும் சேர்ந்து முதன்முதலில் நடித்த ஏ மாயா சேசவே என்ற படத்தை நியாபகம் வைத்துக்கொள்ளும் விதமாக YMC என்றும் டாட்டூ குத்தியிருந்தார். அந்த டாட்டூவை அவர் அழித்திருப்பதும் இந்த வீடியோ மூலம் உறுதியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X