»   »  சூர்யாவுக்கு சமீரா ரெட்டி

சூர்யாவுக்கு சமீரா ரெட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil


நிறுத்தி வைத்திருந்த வாரணம் ஆயிரம் படத்தை தூசு தட்டி எடுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

Click here for more images

சூர்யாவை வைத்து கெளதம் மேனன் திட்டமிட்ட படம் வாரணம் ஆயிரம். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் படம் சில பிரச்சினைகளால் தடைபட்டது.

வேல் படத்தில் நடிக்க சூர்யா கால்ஷீட் கொடுத்து விட்டதே, வாரணம் ஆயிரம் நின்றதற்கு முக்கியக் காரணம். இப்போது சூர்யா, வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார். இதையடுத்து கெளதமும், வாரணம் ஆயிரம் படத்தை கையில் எடுத்துள்ளார்.

இப்போது ஹீரோயின் வேட்டை தொடங்கியுள்ளது. முதலில் கொள்ளை அழகி தீபிகா படுகோணை ஹீரோயினாக போட நினைத்தார். ஆனால் அவர் ஷாருக்கானுடன் நடிக்க போய் விட்டதால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.

பிறகு ஆசினை யோசித்தனர். ஆனால் அவரிடமும் டேட்ஸ் இல்லை. இதையடுத்து ஜெனீலியாவை புக் செய்தார் கெளதம். ஆனால், கால்ஷீட் குழப்பம் ஏற்பட்டதால் ஜெனீலியா விலகிக் கொண்டார்.

படத்தின் கதைப்படி இரண்டு நாயகிகள். அதில் 2வது நாயகியாக குத்து ரம்யா நடிக்கிறார்.ஃபர்ஸ்ட் ஹீரோயின்தான் பெரும் குழப்பமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நாயகியையும் பிடித்து விட்டார் கெளதம்.

பாலிவுட்டின் செக்ஸ் பாம், சமீரா ரெட்டிதான் முதல் நாயகியாக நடிக்கப் போகிறார். வெளிநாடு வாழ் இந்தியப் பெண்ணாக இதில் சமீரா நடிக்கவுள்ளார். பட டிஸ்கஷனுக்காக கடந்த வாரம் சென்னைக்கு வந்தார் சமீரா. கெளதமுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டாராம்.

கடந்த சனிக்கிழமை படத்தின் காஸ்ட்யூம் டிசைனரான பானு, சமீராவை வைத்து ரிகர்சல் பார்த்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள படப்பிடிப்பில் சமீரா கலந்து கொள்ளவுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil