90 கிலோ வெயிட் ஏறிடுச்சு.. பீச்சில் அஞ்சலை போட்ட குளியலை பார்த்தீங்களா.. வேறலெவல் சமீரா ரெட்டி!
சென்னை: 46 வயதாகும் நடிகை சமீரா ரெட்டி தனது குடும்பத்துடன் பஹாமாஸுக்கு சம்மர் டூர் சென்றுள்ள நிலையில், அங்கே கடலில் குளித்து விளையாடும் வீடியோவையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு 'மெயினே தில் துஜ் கோ தியா' சோஹைல் கான், சஞ்சய் தத் உடன் இணைந்து நடித்து இந்தியில் நடிகையாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. அதன் பின்னர், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவருக்கு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான நரசிம்மடு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமீரா ரெட்டியை தமிழில் இயக்குநர் கெளதம் மேனன் வாரணம் ஆயிரம் படத்தில் ரசிகர்களின் அஞ்சலையாக அறிமுகப்படுத்தினார்.
90 கிலோ வெயிட்: இந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய உடல் எடை 90 கிலோ வரை அதிகரித்து விட்டது என்றும் இந்த ஆண்டு முழுவதும் கடுமையான வொர்க்கவுட் செய்து உடல் எடையை கணிசமாக குறைப்பேன் என சவால் விட்டிருந்தார் சமீரா ரெட்டி. அதற்காக ஜிம்முக்கு சென்று கடுமையாகவும் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். சீக்கிரமே கணிசமாக உடல் எடையை குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்மர் டூர்: கரீபியக் கடலில் இருக்கும் தீவு நாடான பஹாமாஸுக்கு சம்மர் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் சமீரா ரெட்டி. சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி மற்றும் ஆர்யா - மாதவன் நடித்த வேட்டை என தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த சமீரா ரெட்டி கடைசியாக கன்னடத்தில் 2013ம் ஆண்டு வெளியான வரதநாயகா படத்திற்கு பிறகு நடிப்பை மொத்தமாக விட்டு விட்டார். 2004ல் படமாக்கப்பட்ட 'நாம்' எனும் இந்தி படம் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வெளியானது.
நீச்சல் உடையில் சமீரா ரெட்டி: 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சமீரா ரெட்டிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். சம்மர் விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் பஹாமாஸ் சென்றுள்ள சமீரா ரெட்டி அங்கே நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் தருணங்களையும் காமெடி ரீல்ஸ்களையும் பதிவிட்டு வரும் சமீரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
மீண்டும் நடிப்பரா?: இந்த ஆண்டு எப்படியாவது உடல் எடையை குறைத்து விட வேண்டும் என்கிற முடிவில் கடுமையாக உழைத்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பதை நிறுத்தி விட்ட நிலையில், கடந்த ஆண்டு மத கஜ ராஜா படம் போல பல ஆண்டுகள் கடந்து வெளியான நாம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ரசிகர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











