சமீரா ரெட்டி கர்ப்பம்... இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என அறிவிப்பு

By Shankar

இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்த சமீரா ரெட்டி கர்ப்பமாக உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை மணந்தார் சமீரா. திருமணத்துக்குப் பின் பார்ட்டி விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ராஜபக்சே மகன் டெல்லிக்கு வந்திருந்தபோது, அவருடன் சமீரா மிக நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது நினைவிருக்கலாம்.

Sameera Reddy expecting her first child

இந்த நிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதனை சமீராவும் சமூக வலைத் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் முதல் வாரிசை ஆவலுடன் வரவேற்கக் காத்திருப்பதாகக் கூறியுள்ள சமீரா, இந்த தாய்மை தனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று கூறியுள்ளார்.

சினிமாவிலிருந்து தான் முழுமையாக ஒதுங்கி விட்டதாகவும், இனி நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X